தென் மாகாண சபைக்குட்பட்ட பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமுகமாக தென் மாகாண ஆளுனர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மூன்றாவது கட்ட நியமனக் கடிதங்கைள கையளிக்கும் நிகழ்வு அண்மையில் மாத்தறை நூபே ஸனஸ கூடத்தில் நடைபெற்றது.
தென் மாகாண பாடசாலைகளில் 3420 ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வந்தது. இதில் இதுவரையில் 3210 ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மீதமுள்ள வெற்றிடங்கள் விரைவில் பூர்த்தி செய்யப்படவுள்ளதாக ஆளுனர் அங்கு குறிப்பிட்டார்.
இந் நிகழ்வில் தென் மாகாண கல்விச் செயலாளர் ரஞ்சித் யாப்பா, மாகாண கல்விப் பணிப்பாளர் ஷன்ன உபாலி வீரசேகர, முன்னாள் தென் மாகாண சபை உறுபினர் கயான் சஞ்சீவ மற்றும் பிரதிக் கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் நியமனம் பெறும் ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
வெலிகம தினகரன் நிருபர்