Sunday, November 24, 2024
Home » சுதந்திரக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின் 2ஆவது மக்கள் பேரணி ஜூன் 29 வெல்லவாய நகரில்

சுதந்திரக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின் 2ஆவது மக்கள் பேரணி ஜூன் 29 வெல்லவாய நகரில்

by Rizwan Segu Mohideen
June 24, 2024 5:19 pm 0 comment

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணிக் கட்சி இணைந்து நடத்தும் பொதுக்கூட்டத் தொடரின் இரண்டாவது மக்கள் கூட்டம் எதிர்வரும் ஜூன் 29ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு மொணராகலை மாவட்டத்தின் வெல்லவாய நகர மையத்தில் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. “நாட்டிற்கு வெற்றி – ஒன்றிணைந்து பயணிப்போம்” எனும் தொனிப்பொருளின் கீழ் இந்த மக்கள் கூட்டம் இடம்பெறவுள்ளது.

வெல்லவாய மக்கள் பேரணி, வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் ஜகத் புஸ்பகுமாரவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய கூட்டணி கட்சி ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து புதிய கூட்டணியின் வேலைத்திட்டம் பலப்படுத்தப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமளவிலான எம்.பி.க்களின் பங்கேற்புடன் புதிய கூட்டணி தலைமையிலான ஏனைய கட்சிகள், பாரிய கூட்டணியொன்றை கட்டியெழுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், பல்வேறு சிவில் அமைப்புக்கள் இப்புதிய கூட்டணியை நோக்கி அணி திரளத் தயாராகி வருவதாக நிமல் லான்சா தெரிவித்தார்.

இந்த மக்கள் பேரணி கூட்டத்திற்கு, நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன, துமிந்த திஸாநாயக்க, ஜகத் புஸ்பகுமார, சுசில் பிரேமஜயந்த, நளின் பெனாண்டோ, அநுர பிரியதர்ஷன யாபா, நிமல் லான்சா, பிரியங்கர ஜயரத்ன ஆகியோர் உள்ளிட்ட புதிய கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT