லண்டனில் வேலை பெற்று தருவதாக கூறி யாழ்ப்பாண இளைஞனிடம் 80 இலட்ச ரூபாயை மோசடி செய்த லண்டன் பிரஜாவுரிமை பெற்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் அண்மையில் யாழ்ப்பாணம் வந்திருந்த வேளை , லண்டனில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் வேலை பெற்று தருவதாக கூறி யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனிடம் 80 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்றுள்ளார்
பணத்தினை பெற்றுக்கொண்டவர் , இளைஞனை லண்டனுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை எடுக்காததால் , சந்தேகம் அடைந்த இளைஞன் தனது பணத்தினை மீள தருமாறு கோரியுள்ளார்.
பணத்தினை பெற்றவர், அதனை மீள கையளிக்காததால் இளைஞன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து, பொலிஸாரினால் லண்டன் பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாடுகளில் பிரஜாவுரிமை பெற்றவர்கள் வெளிநாடுகளில் வேலை பெற்று தருவதாக யாழ்ப்பாண இளைஞர்கள் யுவதிகளை இலக்கு வைத்து மோசடியில் ஈடுபட்டு வரும் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வருவதாகவும் , அது தொடர்பில் விழிப்பாக இருக்குமாறும் பொலிஸார் கோரியுள்ளனர்.
யாழ்.விசேட நிருபர்