Sunday, November 24, 2024
Home » புலம்பெயர் தொழிலாளர்களை இணைத்து 100,000 தொழில் முயற்சியாளர்களை உருவாக்க திட்டம்

புலம்பெயர் தொழிலாளர்களை இணைத்து 100,000 தொழில் முயற்சியாளர்களை உருவாக்க திட்டம்

- ஜூலை 07ஆம் திகதி நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பம்

by Rizwan Segu Mohideen
June 23, 2024 2:31 pm 0 comment

வெளிநாடுகளுக்குச் சென்று இலங்கை திரும்பிய தொழிலாளர்கள் மற்றும் வெளிநாடுகளில் தொழில்புரியும் தொழிலாளர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களை இணைத்து 100,000 இலங்கை தொழில்முனைவோரை உருவாக்க நடவடிக்கை எடுக்கவுள்ளாகவும், அனை ஜூலை 07ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இணைந்து இந்த நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாகவும், நாட்டில் தொழில் முயற்சியாளர்களை உருவாக்கி ஊக்குவிப்பதற்கான அவசியத்தை குறிப்பாக விளக்கி அதற்கான ஏற்பாடுகள் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஜயகமு ஸ்ரீலங்கா அம்பாறை நிகழ்வினை நேற்று (22) ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்தார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் இணைந்து அமைச்சு இச்செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக அவர் இதன்போது  குறிப்பிட்டார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர்,

100,000 தொழில் முயற்சியாளர்களுக்கு முதல் சுயதொழில் உதவியாக 50,000 ரூபா வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளோம்.

டி.எஸ்.சேனநாயக்க 1949 இல், சுதந்திர இலங்கையின் முதலாவது அபிவிருத்தித் திட்டமான கல் ஓயா வேலைத்திட்டம் இங்கு ஆரம்பிக்கப்பட்டது. இங்கு மின்னேரியா குளத்தை கட்டிய மஹாசேன் மன்னன் நீர்ப்பாசன கலாச்சாரத்திற்கு தனது பங்களிப்பால் கடவுளாக மாறினார். அதனால்தான் அம்பாறை மக்கள் டி.எஸ்.சேனநாயக்காவை கடவுளாகக் கருதியபோது, JVP தோழர்கள் அக் காலத்தில் எதிர்த்தார்கள்

இடதுசாரிகள் எப்போதும் நாட்டின் ஒவ்வொரு வளர்ச்சித் திட்டத்தையும் எதிர்க்கும் குழு. அந்த JVP
சகோதரர்கள் இன்னும் அப்படியே இருக்கிறார்கள். சந்திரிகாவின் காலத்தில் மோனாஷ் பல்கலைக்கழகம் இலங்கைக்கு வருவதை நிறுத்தினார்கள். அந்த பல்கலைக்கழகம் தற்போது மலேசியாவில் செயற்பட்டு வருகிறது.இது இன்று அவர்களின் பொருளாதாரத்திற்கு ஆண்டுதோறும் 400 பில்லியன் டாலர்களை பெற்றுக் கொடுக்கின்றது. நாட்டின் அனைத்து திட்டங்களும் இந்த சிக்கலை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான உற்பத்திப் பொருளாதாரம் 1948-49 மறைந்த டி.எஸ் சேனாநாயக்கவால். லட்சக்கணக்கான ஏக்கரில் கரும்பு பயிரிடப்பட்டது. நீர்த்தேக்கங்கள் கட்டப்பட்டன.  சுற்றுலாத்துறையை மேம்படுத்த வேண்டும். எலோன் மஸ்க் போன்ற தொழிலதிபர்களை இலங்கைக்கு அழைத்து வர வேண்டும்.

வரலாற்றின் ஆரம்பத்திலிருந்து இருந்துவேலை செய்யும் போது அபிவிருத்தி திட்டங்கள் எதிர்க்கப்பட்டன. இந்த நாடு முன்னேற முடியுமா? மலேசியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், துபாய், வியட்நாம், சீனா போன்ற நாடுகளில் பலகைப் போராட்டங்கள் நடக்கின்றனவே, போராட்டங்கள் நடந்தவுடன் அந்த நாடுகளில் அபிவிருத்தி திட்டங்கள் நிறுத்தப்பட்டதா? பலகை பிடித்தவர்களையும், தெருக்களில் கூச்சலிடுபவர்களையும் அவர்கள் விரும்பியவாறு நாடுகள் அபிவிருத்தி செய்யவில்லை. ஏனெனில் நாட்டு மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதில் துணிச்சலான முடிவுகளை ஜனாதிபதி ரணில் எடுத்தார்.

இன்று நாம் அதைப் பற்றி சிந்தித்து இந்த பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க விரும்புகிறோம். நாம் புதியதோர் சமுதாயத்தை உருவாக்க முன்வர வேண்டும். புனித பொசன் தினத்தில் இருக்கும் நாம், வங்குரோத்து அடைந்த நாட்டில் இருந்து மீண்டது போன்று கட்சி, நிறத்திற்காக மீண்டும் அந்த வங்குரோத்து நிலை ஏற்படாமல் இருக்க பிரார்த்தனை செய்வோம். என தொரிவித்தார். (அமைச்சின் ஊடகப் பிரிவு)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT