ட்விட்டர் என முன்னர் அழைக்கப்பட்ட X சமூக வலைத் தளத்தில் தற்போது பயனர்கள் வழங்கும் விருப்பக்குறி அல்லது லைக்குகளை இட்டவர்களை ஏனையோர் பார்க்க முடியாது.
பயனர்களைப் பாதுகாத்து அவர்களின் ஈடுபாட்டை அதிகரிக்க இந்த முயற்சி எடுக்கப்படுவதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக பயனர்களின் பதிவிற்கு வழங்கப்படும் விருப்பங்களை யார் இட்டார் என்பதை காட்டும் பகுதி ஒன்று இருந்தது. அதனை X பக்கத்தைப் பின்தொடரும் அனைவரும் பார்க்கக் கூடியதாக இருந்தது.
அதன் படி ஒருவரின் விருப்பங்கள் யாவை என்பதை மற்றவர்கள் அறிந்துகொள்ளலாம். இனி அதற்கு வாய்ப்பில்லை.
அந்த வகையில், தற்போது மேற்கொண்டுள்ள புதிய மாற்றத்துக்குப் பின்னர், விருப்பக்குறிகளைப் பதிவிடும் போக்கு அதிகரித்துள்ளதாக X தளத்தின் பிரதம நிர்வாகியும் அதன் உரிமையாளருமான எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.
Massive increase in likes after they were made private! pic.twitter.com/f5SisAw5w3
— Elon Musk (@elonmusk) June 13, 2024
பயனர்கள் தாங்கள் விரும்பும் பதிவுகளுக்கு எவ்வித தடங்கலும் இன்றி, விருப்பக்குறியை வழங்க அனுமதிப்பது முக்கியம் என்று அவர் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.