Sunday, November 24, 2024
Home » ரூ. 1,000 இல் வாழ முடியாது; வறுமை 26% அதிகரிப்பு

ரூ. 1,000 இல் வாழ முடியாது; வறுமை 26% அதிகரிப்பு

- தோட்ட தொழிலாளர் சம்பளம் அதிகரிக்கப்டாவிட்டால் நடவடிக்கை

by Rizwan Segu Mohideen
June 1, 2024 1:43 pm 0 comment

– தோட்டங்கள் வேறு நிர்வாகங்களுக்கு வழங்கப்படும்

உழைக்கும் மக்கள் 1000 ரூபாவில் வாழலாம் என்று சொன்னால் அது தவறு. வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது. பொருளாதார நிலைமை வீழ்ச்சியடைந்துள்ளது, வறுமை 26% அதிகரித்துள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

தோட்டத் துறையில் மேலும் அதிக வறுமை நிலவுகின்றது. எனவே பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை முதலாளிமார் சம்மேளனம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு சம்பளத்தை வழங்க முடியாவிட்டால் பெருந்தோட்டங்களை தொழிலாளர்களின் பாதுகாப்புக்காக நிர்வகிக்ககூடியவர்களுக்கு வழங்குவோம்.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஜயகமு ஸ்ரீலங்கா மக்கள் நடமாடும் சேவையின் பதினைந்தாவது கட்டத்தின் முதல் நாள் நிகழ்வு பதுளை கால்பந்து விளையாட்டு மைதானத்தில்
நேற்று (31) அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் நடைபெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர்

போராட்டத்தை மட்டுமே பயிற்றுவித்தவர்களின் எதிர்ப்பு காரணமாக இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதி கூறியது போன்று கண்ணாடிப் பாலத்தில் இரும்பு காலணிகளை அணிந்து கொண்டு கடினமான பயணத்தை ஆரம்பித்தோம். அப் பயணத்தில் இரும்பு காலணிகள் எவ்வளவு கடினம் என்பது எமக்கு மட்டுமே தெரியும்.

ஊவா மாகாணத்தின் தலைநகரம் பதுளை வரலாற்றில் இன்று அதிகமான அபிவிருத்திகள் எட்டப்பட்டுள்ளன. பதுளை மேலும் அபிவிருத்தி செய்யக்கூடிய பாரிய நிலப்பரப்பைக் கொண்ட மாவட்டம். இம் மாவட்டம் இலங்கைக்கு அதிக சுற்றுலாப் பயணிகளை வரவழைத்து குறிப்பிடத்தக்க அபிவிருத்தியை ஏற்படுத்தக்கூடிய பிரதேசமாகும்.

அதற்கான அடிப்படை ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இலங்கையின் பொருளாதாரத்திற்கு பெருந்தோட்டங்கள் பாரிய பங்களிப்பை வழங்குகின்றன. பெருந்தோட்டங்களையும் அரசாங்கத்தின் கீழ் காணப்படும் தோட்டங்களையும் நாம் பாதுகாக்க வேண்டும். பாரம்பரியமாக இத்தொழிற்துறையில் ஈடுபட்டுவரும் எமது தொழிலாளர்களை சுரண்டி உழைப்பு நடத்துகிறார்கள். இருக்கின்ற பழைய தேயிலைப் செடியை வைத்துக்கொண்டு பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் மாத்திரமே வேதனம் வழங்கப்படுகிறது. முதலாளிகள் மாத்திரமே பணக்காரர்களாகும் முறையை நாம் மாற்றியமைக்க வேண்டியுள்ளது.

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த குறைந்தபட்ச சம்பளம்1700 ரூபா வழங்கப்பட வேண்டும். புதிய உத்திகளைப் பயன்படுத்தி அதிகளவான தேயிலை கொழுந்துகளை உற்பத்தி செய்யும் தோட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். நவீன தொழில்நுட்பத்தை கையாண்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அது மாத்திரமன்றி தோட்ட மக்களுக்கு தோட்டத்தில் வீடுகள் அமைப்பதற்கு ஒரு கிராமத்தை வழங்கி ஒரு துண்டு காணியை சிரேஷ்ட உரிமையாக வழங்குவதற்கும், தோட்டத்தின் உரிமையாளராக விவசாயம் செய்வதற்கும் தோட்ட மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக்கொடுக்க செயற்பட்டு வருகின்றோம்.

சம்பள உயர்வுக்காக இப்போது நீதிமன்றம் சென்று போராடுகிறோம். ஆனால் நாட்டைக் கட்டியெழுப்ப நினைப்பவர்கள் இது தொடர்பாக எதுவும் பேசாமல் இருக்கிறார்கள்.

அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தி சட்டங்களை மாற்றி அமைப்போம்.

இப்பெருந்தோட்ட மக்களுக்காக வடிவேல் சுரேஷும் தொண்டமானும் மாத்திரமே எங்களுடனும் ஜனாதிபதியுடனும் நின்றார்கள்.

பதுளை மாவட்டத்தில் தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்த பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நன்மைகளை வழங்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்பட்டு வருகின்றது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT