சீனாவின் பொருளாதார மந்தநிலை, நாட்டின் செல்வந்தர்கள் தொகையில் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீன கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து கடந்த ஆண்டு (2023) 16.7 டிரில்லியன் டொலரிலிருந்து இந்த ஆண்டு (2024) 13.3 ட்ரில்லியன் டொலராகக் குறைந்துள்ளது. இது முழுமையான செல்வத்தின் வீழ்ச்சியைக் குறிக்கிறது.
மே 7 அன்று பிரிட்டிஷ் முதலீட்டு இடம்பெயர்வு ஆலோசனை நிறுவனமான ஹென்லி & பார்ட்னர்ஸ் மற்றும் நியூ வேர்ல்ட் வெல்த் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட உலகின் பணக்கார நகரங்கள் அறிக்கை 2024 இன் படி, உலகளவில் முதல் 50 இடங்களில் உள்ள ஆறு சீன நகரங்கள் 2023 உடன் ஒப்பிடும்போது சராசரியாக இரண்டு இடங்கள் சரிந்துள்ளன.
இந்தப் பட்டியலில் நியூயார்க் நகரம் முதலிடத்திலும், சென் பிரான்சிஸ்கோ, டோக்கியோ, சிங்கப்பூர் ஆகிய நகரங்கள் முதலிடத்திலும், ஹாங்கொங் மற்றும் சீனத் தலைநகரான பீஜிங் ஆகியவை முறையே ஒன்பதாவது மற்றும் பத்தாவது இடங்களில் உள்ளன.
இந்த அறிக்கையின்படி, பீஜிங் மற்றும் ஹாங்கொங் தவிர, சீனாவின் பிரதான நிலப்பரப்பில் உள்ள ஏனைய நகரங்கள் முதல் 50 இடங்களுக்குள் வருகின்றன.ஷாங்ஹாய், ஹாங்சோ, ஷென்சென் மற்றும் குவாங்சோ ஆகியவை இதில் அடங்கும்.
ஹாங்கொங் ஏழாவது இடத்திலிருந்து ஒன்பதாவது இடத்துக்கும், பீஜிங் எட்டாவது இடத்திலிருந்து பத்தாவது இடத்துக்கும், ஷாங்ஹாய் ஒன்பதாவது இடத்திலிருந்து பதினொன்றாவது இடத்துக்கும் சரிந்தன.
இந்த அறிக்கையின்படி, கடந்த ஆண்டில் சீனாவின் பொருளாதார வீழ்ச்சியையும், நாட்டில் சொத்து இடைவெளி அதிகரித்துள்ளதையும் புள்ளிவிவரங்கள் பிரதிபலிக்கின்றன.
இதற்கிடையில், மார்ச் மாதம் வெளியிடப்பட்ட உலகலாவிய செல்வந்த பட்டியல் 2024 சீனாவின் செல்வந்த குடிமக்கள் மத்தியில் ஒரு சரிவு போக்கை வெளிப்படுத்தியது. இந்த அறிக்கையின்படி, சீனா ஒரு வருடத்தில் மொத்தம் 155 கோடீஸ்வரர்களை இழந்துள்ளது,
சீனாவைத் தளமாகக் கொண்ட ஆராய்ச்சி நிறுவனமான ஹுருன் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் வெளியிட்ட அறிக்கையின்படி, சீனாவின் கோடீஸ்வரர்களின் மொத்தச் சொத்து 15 சதவீதம் குறைந்துள்ளது.
ஹுருன் ரிப்போர்ட் தலைவரும் தலைமை ஆய்வாளருமான ரூபர்ட் ஹூக்வெர்ஃப் கூறுகையில், “கடந்த சில ஆண்டுகளில் சீனாவில் செல்வ உருவாக்கம் ஆழமான மாற்றங்களைச் சந்தித்துள்ளது.
“இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஹுரூன் உலகளாவிய பணக்காரர்கள் பட்டியலில் 40 சதவீதம் பேர் தங்கள் கோடீஸ்வரர் அந்தஸ்தை இழந்த நிலையில், சீனாவில் பில்லியனர்களின் எண்ணிக்கையில் பெரிய சரிவு இருந்தபோதிலும், சீனா 120 புதிய முகங்களை பட்டியலில் சேர்த்துள்ளது ” என்று ஹூக்வெர்ஃப் மேலும் கூறினார்.
போர்ப்ஸ் இதழின் 2024 ஆம் ஆண்டு உலக பில்லியனர்கள் பட்டியல், சீனாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சியைக் காட்டுகிறது. இது மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து சரிவைக் காட்டுகிறது.
போர்ப்ஸ் இதழின்படி, மொத்தம் 406 சீன கோடீஸ்வரர்கள் தரவரிசையில் இடம்பிடித்துள்ளனர். இது ஒரு வருடத்திற்கு முன்பு 495 ஆகவும், 2021 இல் 626 ஆகவும் இருந்தது.
சீனாவின் கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பு கடந்த ஆண்டு (2023) 16.7 டிரில்லியன் டொலரிலிருந்து இந்த ஆண்டு (2024) 13.3 டிரில்லியன் டொலராக குறைந்துள்ளது.2022ல் இருந்த 19.6 டிரில்லியன் டொலரை விடவும், 2021ல் 25 டிரில்லியன் டொலராகவும் குறைந்துள்ளது.
“தொற்றுநோய் மற்றும் புவிசார் அரசியல் பதற்றத்தின் தொடர்ச்சியான வீழ்ச்சி பங்கு விலைகளை குறைத்து, உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தில் பொருளாதார வளர்ச்சியை பாதித்துள்ளது ” என்று அறிக்கை மேலும் கூறியது.
சீன கோடீஸ்வரர்களின் சொத்துக்கள் வீழ்ச்சி மற்றும் சீனாவில் பணக்கார குடிமக்களின் எண்ணிக்கை குறைவதற்கான காரணங்களில் ஒன்றை விளக்கி, இபொச் டைம்ஸ், சீனாவின் பொருளாதார வீழ்ச்சி மற்றும் அதிகரித்து வரும் அரசியல் அபாயங்களுக்கு மத்தியில், பல பணக்கார சீன குடிமக்கள் முதலீட்டிற்காக வெளிநாடுகளுக்கு தங்கள் சொத்துக்களை மாற்றியுள்ளனர். பலர் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு குடிபெயர்கின்றனர்.
உலகளாவிய செல்வந்தர் தொடர்பான ஆய்வாளர்களின் கூற்றுப்படி, பணக்கார தனிநபர்களுக்கும் பொது மக்களுக்கும் இடையில் சீனாவின் செல்வ இடைவெளியை விரிவுபடுத்துவது நாட்டின் சொத்து வீழ்ச்சிக்கு மற்றொரு முக்கிய காரணமாகும்.
2023ல் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி சீனாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையில் சரிவுக்கு வழிவகுத்த போதிலும், 2023க்கு முந்தைய ஒன்பது ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், இதற்கு மாறாக, சாதாரண சீன மக்களின் வருமான வளர்ச்சி அதிகமாக இருப்பதாகவும் அறிவிக்கப்படுகிறது.
சீன மக்களின் உண்மையான வருமான நிலை அல்லது செல்வ இடைவெளி குறித்து சீன அரசாங்கம் எந்த உத்தியோகபூர்வ தகவலையும் வெளியிடவில்லை.