முட்டை அடைகாக்கும் இயந்திரங்களை விநியோகிக்கும் மற்றொரு வேலைத்திட்டம் பிரதமர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் அண்மையில் கொலன்னாவ பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்துதல் மற்றும் சிறிய அளவிலான கோழிப்பண்ணை உரிமையாளர்களை மேம்படுத்தும் நோக்கில் இச்செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
சீன அரசாங்கம் இதற்கான நிதியுத வியை வழங்கி வருகிறது.இவ்வியந்திரத்தின் மூலம் ஐந்து குடும்பங்களுக்கு நேரடி வருமான வழிகள் திறக்கப்படும்.
மேலும், மறைமுக தொழில்வாய்ப்புக்களையும் இத்திட்டம் உருவாக்கும். வருமானமீட்டும் வழிகளை மேம்படுத்துதல், குடும்ப போஷாக்கை மேம்படுத்துதல், முட்டை உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் வீட்டு மட்டத்தில் தன்னிறைவான வீட்டுத் தோட்டங்களை உருவாக்குதல் ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் இது, செயலுருவாக்கப்படுகிறது.
இங்கு கருத்துத் தெரிவித்த பிரதமர் :
கோழி வளர்ப்பு, முட்டை உற்பத்தி என்பன கடந்த காலங்களில் கிராக்கிமிக்க தொழில்களாக இருந்தன. அனுபவமுள்ளோர் இத்தொழில்களில் ஈடுபடவதற்கு முன்வர வேண்டும்.
சிறந்த பயிற்சிகளைப் பெற்றோருக்கு இவ்வியந்திரங்கள் உரிமையாக்கப்படும். கோழி வளர்ப்பை தொழிலாகக் கொண்டால் வீட்டு வருமானம் அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு போஷாக்கான உணவுகளை வழங்கவவும் இத்திட்டம் வழிகோலும் என்றும் பிதமர் தெரிவித்தார்.