Sunday, November 24, 2024
Home » நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருந்தவர்களின் 40 வருட சாபம்
நாட்டிற்கு ஏற்பட்டிருப்பது 75 வருட சாபமல்ல

நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருந்தவர்களின் 40 வருட சாபம்

- ஜே.வி.பி.யை சாடும் அமைச்சர் மனுஷ நாணயக்கார

by Rizwan Segu Mohideen
May 19, 2024 10:28 am 0 comment

“…அப்போது திறந்த பொருளாதாரம் என்று ஒரு வதந்தியை உருவாக்கினார்கள். கல் ஓயா திட்டம் , உமா ஓயா என்று ஒரு பெரிய வதந்தியை உருவாக்கி, ‘IMF’இற்கும் ஒரு பெரிய வதந்தியை உருவாக்கினார்கள். 75 ஆண்டுகால சாபத்தால் இந்த நாட்டின் 40 ஆண்டுகால வளர்ச்சி நின்று போனது. வியட்நாமை சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இலங்கை அறிவித்தபோது, சிலர் அதைக் கண்டு சிரித்தனர். நம் நாட்டைப் பார்த்து சிரிக்கிறோம். அதை நாமே ‘செயார்’ செய்யும் போது, அது உலகிற்கு செல்கிறது. சமூக ஊடகங்களையும் சரியாகப் பயன்படுத்த வேண்டும்’’

‘ஜயகமு ஸ்ரீலங்கா – மக்கள் நடமாடும் சேவையின் அடுத்த கட்டமாக, நுவரெலியால் நேற்று (18 ) நடைபெற்ற ஸ்மார்ட் யூத் கிளப்’ திட்ட்ட நிலவில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் மனுஷ நாணயக்கார மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து பேசிய அமைச்சர்,

சில வருடங்களுக்கு முன்பு 225 உம் வேண்டாம் என்று தெரிவித்து, நாட்டில் ஒரு அரசியல் எழுச்சி உருவாக்கி, நாடு சரிந்தது நமக்கு நினைவிருக்கிறது. அந்த நேரத்தில், நாங்கள் சவால்களை ஏற்க வேண்டியிருந்தது.

13 வருடங்கள் இந்த நாட்டில் படித்துவிட்டு நாடு தீப்பற்றி எரிந்த போது படித்தவர்கள் நாட்டைவிட்டு வெளியேறினார்கள் . அவ்வாறே எமது இளைஞர்களும் தவறான பாதைகளைத் தேர்ந்தெடுத்து வெளிநாடுகளில் பல்வேறு இடங்களில் காணாமல் போய் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அப்போது, தவறான வழிகளில் மாட்டிக் கொள்ள வேண்டாம் என்றும், கடத்தல்காரர்களிடம் சிக்க வேண்டாம் என்றும் விளம்பரம் செய்தோம்.

இந்தியாவைப் பற்றி தவறான கருத்தை உருவாக்கி, இந்திய எதிர்ப்பு கொள்கையை உருவாக்கி, நாட்டு மக்களை இந்தியாவுக்கு எதிராக செயற்பட வைத்தார்கள். இந்த சித்தாந்தங்களால், ஒரு நாடாக நாம் முன்னேற முடியவில்லை. ஆனால் இந்தியாவுக்கு எதிரானவர்கள் என்று சொன்னவர்கள் இப்போது இந்தியா செல்கிறார்கள். இந்தியாவுக்கு இடையே மனிதச் சங்கிலி வலுப்பெறும் போதுதான் நாம் முன்னேற முடியும்.

சிங்கப்பூரில் துறைமுகத்தை நிர்மாணித்த இலங்கைக்கு லீ குவான் யூ நன்றி தெரிவித்தார். அன்று இலங்கையில் நடந்த போராட்டத்தால் சிங்கப்பூர் வெளியேறியது. ஆனால் இப்போது 75 வருட சாபம் என்று கூக்குரலிட்டு நாட்டுக்குள் வதந்திகளை பரப்பி வருகிறார்கள்.

ஆயினும் நாடு முன்னிருந்த நிலையிலிருந்து மீண்டு வெகுதூரம் முன்னேற்றம் அடைத்து விட்டது. என அமைச்சர் மனுஷ நாணயக்கார இதன்போது தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT