ஜனாதிபதி தேர்தலே முதலில் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாகவும், இத்தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் ஜூலை மாதத்தில் வெளியிடப்படும் என்றும் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் விவசாயத்துறை சார்ந்த அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தையும் விரைவுப்படுத்துமாறும் சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
பாராளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்ற விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் பாராளுமன்ற ஆலோசனைக் குழு கூட்டத்திலேயே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இது தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர், பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்ற போதும் ஜனாதிபதி தேர்தலே முதலில் நடைபெறுவதற்கான அதிக வாய்ப்பு காணப்படுவதாக குறிப்பிட்டார்.
(லோரன்ஸ் செல்வநாயகம் )