மஹரகம அபேக்க்ஷா வைத்தியசாலையின் 2030 வரையிலான உத்தேச அபிவிருத்தித் திட்டங்கள் குறித்த விசேட கலந்துரையாடல் நேற்று (15) நடைபெற்றது. சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன தலைமையில் இது நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில்,ருஹுணு கதிர்காம விகாரையின் நிதியில் 500 படுக்கைகளுடன் நிர்மாணிக்கப்படவுள்ள வார்ட் தொகுதி குறித்தும் மக்களுக்கு உகந்த
சிகிச்சைகளை வழங்குவது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
கதிர்காமம் ருஹுணு விகாரையின் நிதியிலிருந்து 2023.09.21இல்,ஆரம்பிக்கப்பட்ட நான்கு மாடிகளைக் கொண்ட சிறுவர் விடுதித் தொகுதியின் நிர்மாணப்பணிகளை இவ்வருடம் ஜுலையில் நிறைவு செய்ய முடியும் என்றும் அதிகாரிகள் இதன் போது தெரிவித்தனர். 150 மில்லியன் ரூபா செலவில் இவ்வைத்தியசாலை நிர்மாணிக்கப்படவு ள்ளது.