Sunday, November 24, 2024
Home » கனடாவில் காட்டுத் தீ பரவல் காரணமாக மக்கள் வெளியேற்றம்

கனடாவில் காட்டுத் தீ பரவல் காரணமாக மக்கள் வெளியேற்றம்

- 5 மாகாணங்களுக்கு காற்றின் தரம் மாசடைவு தொடர்பில் எச்சரிக்கை

by Prashahini
May 14, 2024 9:08 am 0 comment

காட்டுத் தீ பரவல் காரணமாக கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குடியேற்றப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கனடாவில் காட்டுத் தீ பரவல் பருவ காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (10) முதல் கனடாவின் பல பகுதிகளில் தீ பரவல் அதிகரித்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் கனடாவின் ஐந்து மாகாணங்களுக்கு காற்றின் தரம் மாசடைவு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்குப் பகுதியில் நிலவி வரும் காட்டுத் தீ பரவல் காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பிரிட்டிஸ் கொலம்பியா, அல்பேர்ட்டா, சஸ்கற்றுவான், ஒன்றாரியோ, கியூபெக் மாகாணங்களிலும் வடமேற்குபிராந்தியத்திற்கும் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனடவில் தற்பொழுது சுமார் 90 இடங்களில் காட்டுத் தீ பரவியுள்ளதாகவும் இவற்றில் 12 இடங்களில் நிலவி வரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்துவது கடினம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT