562
புத்தாண்டை முன்னிட்டு கொழும்பு புதுச் செட்டியார்தெரு சிவன் கோவிலின் ஏற்பாட்டில் மாபெரும் தேர்ப் பவனி ஒன்று இடம்பெற்றது.
புறக்கோட்டைப் பகுதியில் பல்வேறு வீதிகளினூடாக இடம்பெற்ற இத்தேர்ப் பவனியில் பெருமளவான கொழும்பு வாழ் தமிழ் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது பல நூற்றுக்கணக்கான தேங்காய்களை உடைத்து மக்கள் தமது நேர்த்திக் கடன்களை நிவர்த்தி செய்தமையை அவதானிக்க முடிந்தது.
கொழும்பு தினகரன் நிருபர்