Sunday, November 24, 2024
Home » ‘ஜயகமு ஸ்ரீ லங்கா’ இன்றும், நாளையும் பொலன்னறுவையில்

‘ஜயகமு ஸ்ரீ லங்கா’ இன்றும், நாளையும் பொலன்னறுவையில்

- அநுராதபுரத்தில் ஆரம்பமான நிகழ்வின் 6ஆவது நிகழ்வு

by Rizwan Segu Mohideen
March 16, 2024 4:24 pm 0 comment

மனுஷ நாணயக்கார தலைமையில் அநுராதபுரத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட “ஜயகமு ஸ்ரீ லங்கா” திட்டத்தின் ஆறாவது நிகழ்வு இன்றும் (16) நாளையும் (17) பொலன்னறுவையில் நடைபெறவுள்ளது.

நவீன உலகை எதிர்கொள்ளவதற்கு ஆற்றல் மிக்க இளைஞர்களை உருவாக்கும் நோக்கில் ‘ஜயகமு ஸ்ரீ லங்கா’ வேலைத்திட்டம் நாடுபூராகவும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

ஐந்தாவது வேலைத்திட்டம் கடந்த 09, 10ஆம் திகதிகளில் குருணாகல் வெஹர விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதன் இரண்டாவது நாள் நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் கலந்துகொண்டமை சிறப்பமசமாகும்.

இதன்போது பின்வரும் விடயங்கள் உள்ளிட்ட பல வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

  • உள்நாட்டு, வெளிநாட்டு வேலை வாய்ப்புகள்
  • வெளிநாட்டு தொழிலாளர்களின் முறைப்பாடுகளைப் பெறுதல்
  • வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கான பதிவுகள் மேற்கொள்ளல்
  • தொழில் வங்கியில் பதிவு செய்தல்
  • வெளிநாடு செல்வதற்கு கடன் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்
  • வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு இழப்பீடு/சம்பளம்/காப்புறுதி தொடர்பான சேவைகள்
  • சிரம வசன நித்தியத்தினால் பாடசாலை உபகரணங்கள் வழங்குதல்
  • EPF/ETF தொடர்பான சேவைகள்
  • தொழிற்பயிற்சி கற்கைகளுக்கான பதிவு (இலவசம்/கழிவு)
  • தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவு
  • தொழில்முறை கௌரவத்திற்கு கருசருத் திட்டம்
  • புதியதாக சிந்திக்கும் இளைஞர்களுக்கு SMART YOUTH
  • சமூகத்தில் போதைப்பொருள் தடுப்பு திட்டங்கள்
  • பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைச் சட்ட விழிப்புணர்வு
  • உத்தேச தொழில் பாதுகாப்பு சட்ட விழிப்புணர்வு

குருணாகல் மாவட்டத்தினர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு வசதிகளைப் பெற்றுக் கொடுத்த ‘ஜயகமு ஸ்ரீ லங்கா’ திட்டத்தில் 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் பங்குபற்றியிருந்தன என்பது குறிப்பிட்டதக்கதாகும்.

‘என்னிலிருந்து ஆரம்பிப்போம்’, ‘ஜயகமு ஸ்ரீ லங்கா’ ‘நேர்த்திமிக்க திறமையானவர்கள்’ போன்ற திட்டங்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வேலைகளை நாடிச் வந்த மக்கள் மாதத்தில் அதிக வரவேற்பைப் பெற்று இருந்தது.

அங்குரார்ப்பண நிகழ்வின் சீடா நிறுவனத்தினால் தொழில்முறைப் பயிற்சி உள்ளவர்களுக்கும் மற்றும் இல்லாதவர்களுக்கு அவர்களது அறிவு மட்டத்தை பரிசோதித்து சான்றிதழ்கள் வழங்குவதற்கான பதியுக்களும் மேற்கொள்ளப்பட்டன.

இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் மனுஷ நாணயக்கார
இச்சான்றிதலுக்கான நிதியை சர்வதேச தொழிலாளர் நிறுவனத்துடன் கலந்தாலோசித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் இணைந்து வழங்க தயாராக உள்ளோம் என தெரிவித்தார்.

தொழில்முறைச் சான்றிதழ்கள் இருந்தால் நாட்டிலும் வெளிநாட்டிலும் தொழில் புரியலாம் இதற்கான உரிமத்தை நாங்கள் வழங்குகிறோம். கட்டுமானத் தொழிலுக்கு நீங்கள் பணம் செலவிட தேவையில்லை. ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக அரசாங்கம், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் என்பன அதற்கான செலவை ஏற்க தயாராக உள்ளன.

ஏனைய தொழில்துறையினருக்கு சான்றிதழ்களைப் பெறுவதற்கு நாங்கள் கட்டணம் செலுத்த ஏற்பாடு செய்கிறோம்.
இது ஒரு முயற்சி ஆகும் என தெரிவித்தார்.

மேலும் நாடு திரும்பிய 12 தொழிலாளர்களுக்கு சுய தொழில் புரிய 50000 ரூபா உதவித் தொகை, அவ்வாறே தொழில்முனைவோராக இருக்கும் 09 பேருக்கு 50000 ரூபாய் உதவித்தொகை அங்கவீனமுற்றவர்களுக்கு 32 மூக்கு கண்ணாடிகள், மற்றும் ஒரு சக்கர நாற்காலி போன்றனவும் வழங்கப்படன

நாட்டில் முறைசாரா தொழிற்துறையில் ஈடுபடும் அனைவரின் தொழிலுக்கும் கௌரவத்தை பெற்றுக் கொடுக்கும் “கரு சரு” திட்டத்தின் மூலம் NVQ சான்றிதழ் வழங்கப்பட்டது .

இன்னும் வெளிநாடுகளில் தொழில் புரியும் குருணாகல் மாவட்டத்தை சேர்த்தவர்களின் குடும்பங்களுக்கு பல்வேறு நலன்புரிசேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

‘ஜயகமு ஸ்ரீ லங்கா’ திட்டத்தின் இரண்டாம் நாள் திறமைமிக்க இளைஞர்களை உருவாக்குவதற்காக SMART YOUTH CLUB ஸ்தாபிக்கப்பட்டது.

அத்துடன் ஜனாதிபதி செயலகத்துடன் இணைந்து பத்தாயிரம் இளைஞர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் அனுசரணையில் இலவச தொழிற்பயிற்சிகளை வழங்கும் வேலைத்திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தலைவர் திருமதி ஜோனி சிம்சன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆறாவது “ஜயகமு ஸ்ரீ லங்கா ஸ்ரீ லங்கா” நடமாடும் மக்கள் சேவை இன்றும், நாளையும் (16 -17) தென்மைவாய்ந்த பொலன்னறுவை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெறும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT