மாற்று திறன்களைக் கொண்டவர்கள், கண்டறியப்படாத சிறுநீரக நோயாளிகள் மற்றும் முதியோர் உதவி பெறும் நபர்களுக்கான கொடுப்பனவை அஸ்வெசும நலன்புரி முறைமையின் ஊடாக வழங்க நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான கொடுப்பனவுகள் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, உதவி பெறும் மாற்று திறன்களைக் கொண்ட 410,000 பேருக்கு தலா 7,500 ரூபா மாதாந்த கொடுப்பனவும், சிறுநீரக உதவி பெறும் 50,000 பேருக்கு தலா 7,500 ரூபா கொடுப்பனவும் வழங்கப்படவுள்ளது.
இது தவிர முதியோர் உதவி பெறும் 820,000 பேருக்கு தலா 3,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
இந்த கொடுப்பனவுகள் இந்த வருடம் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் திகதி வரை செலுத்தப்பட வேண்டும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.