Sunday, November 24, 2024
Home » அம்பாறை கரையோரத்தில் சிக்கும் 5 – 25 கிலோ வரை கணையான் மீன்கள்

அம்பாறை கரையோரத்தில் சிக்கும் 5 – 25 கிலோ வரை கணையான் மீன்கள்

- ரூ. 1,000 - 9,000 ஆயிரம் வரை விற்பனை

by Rizwan Segu Mohideen
February 1, 2024 4:48 pm 0 comment

திடீர் காலநிலை மாற்றம் காரணமாக அதிகளவான கணையான் மீன் இனங்கள் அம்பாறை மாவட்டத்தின் பிராந்திய ஆற்றோரங்களில் பிடிபடுகின்றன.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக கடலை நோக்கி ஓடும் நீரோடைகள் ஆறுகளில் கணையான் வகை மீன்கள் கரைவலைகள், கட்டுவலைகள், தூண்டில்கள் மூலம் பிடிக்கப்பட்டு பல ஆயிரம் ரூபா வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

சுமார் 5 முதல் 25 கிலோ எடையுள்ள பாரிய கணையான் மீன் இனங்களே இவ்வாறு மீனவர்கள் பிடித்து வருகின்றனர்.

இவ்வகையான மீன்கள் ரூபா 1,000 முதல் 9,000 வரை விற்பனையாகி வருவதுடன், பொதுமக்களும் அவற்றை ஆர்வத்துடன் கொள்வனவு செய்து வருகின்றனர்.

குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை, நிந்தவூர், பாலமுனை, அட்டாளைச்சேனை பகுதிகளில் இவ்வாறான மீன் வகைகள் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மீனவர்கள் பிடிக்கப்படும் கணையான் மீன்களை பால் கணையான், செங்கணையான், முள்கணையான் என 3 வகைப்படுத்தி விற்பனை செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

பாறுக் ஷிஹான்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT