Sunday, November 24, 2024
Home » யாழில். வீடு புகுந்து ATM அட்டையை திருடியவர் கைது

யாழில். வீடு புகுந்து ATM அட்டையை திருடியவர் கைது

-அட்டையை பயன்படுத்தி , பொருட்களும் கொள்வனவு

by Prashahini
December 10, 2023 12:24 pm 0 comment

வீடொன்றினுள் புகுந்து , பெண்ணொருவரை அச்சுறுத்தி அவரது வங்கி அட்டையை (ATM) திருடிய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட பகுதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த இளைஞன் , வீட்டில் தனிமையில் இருந்த யுவதியை மிரட்டி , அவரிடம் இருந்த வங்கி அட்டையை திருடி சென்றுள்ளார்.

அது தொடர்பில் யுவதியினால் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாட்டின் பிராகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த வேளை , திருடப்பட்ட வங்கி அட்டையை பயன்படுத்தி , பல்பொருள் அங்காடி ஒன்றில் இளைஞன் பொருட்களை கொள்வனவு செய்ததை அறிந்து , விசாரணைகளை முன்னெடுத்து இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்.விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT