மூத்த எழுத்தாளர் எம்.ஏ.ரஹீமா எழுதிய ‘சூல்சோறு’ சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழா எதிர்வரும் 10 ஆம் திகதி கொழும்பு அல்-ஹிதாயா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் காலை 9.30 மணிக்கு தமிழ்மாமணி அல் அஸுமத்தின் தலைமையில் நடைபெறும்.
இந்த நிகழ்வில் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி அதிபர் எம்.எச். மும்தாஜ் பேகம் பிரதம அதிதியாக கலந்து கொள்வதோடு சிறப்பு அதிதியாக மேர்சி லங்கா திட்ட முகாமையாளர் எம்.எச்.எம். ஷபூக் (மறைந்த எழுத்தாளர் எம்.எம்.எம்.ஷம்ஸின் புதல்வர்) கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
கௌரவ அதிதிகளாக எழுத்தாளர் திக்குவல்லை கமால், தினகரன் சிரேஷ்ட ஊடகவியலாளரும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு ஊடக அதிகாரியுமான ஷம்ஸ் பாஹிம் மற்றும் மறைந்த எழுத்தாளர் ஏ. இக்பாலின் புதல்வி எம்.ஜே.பி. மலீஹா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
நூலின் முதற்பிரதியை ஷம்ஸ் சபூக் பெற்றுக் கொள்வார். நூலாசிரியர் பற்றிய அறிமுகத்தை சிரேஷ்ட அறிவிப்பாளர் புர்கான் பீ இப்திகார் நிகழ்த்த இருப்பதோடு நூல் திறன் நோக்கு எழுத்தாளர் அஷ்ரப் சிஹாப்தீனினால் நிகழ்த்தப்படும். திருகோணமலை அஷ்ரபா நூர்தீன் மற்றும் வாழைத்தோட்டம் வஸீர் ஆகியோரின் கவிவாழ்த்தும் இடம்பெற உள்ளதோடு கவிஞர் நாச்சியாதீவு பர்வீன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவார்.