சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் 2030 எக்ஸ்போ கண்காட்சியை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. உலக எக்ஸ்போ 2030 என்பது ஒரு சர்தேச கண்காட்சி ஆகும். இது சவூதி அரேபியாவின் தலைநகரமான ரியாத் நகரத்தில் 2030 ஆம் ஆண்டு ஒக்டோபர் 1 முதல் 2031 மார்ச் 31 வரை நடைபெறும்.
கடந்த 28 ஆம் திகதியன்று ரோம் (இத்தாலி) மற்றும் பூசான் (தென்கொரியா) ஆகிய நகரங்களுடன் போட்டியிட்டு ரியாத் நகரம் இந்தக் கண்காட்சியை நடத்த தேர்ந்தெடுக்கப்பட்டது.
உலக எக்ஸ்போ 2030 இன் தலைப்பு ‘மாற்றத்தின் சகாப்தம் நாம் ஒன்றாக எதிர்காலத்தைப் பார்க்கிறோம்’ என்பதாகும். இது நவீன கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பம் வாயிலாக உலகின் மிகப்பெரிய சிக்கல்களான காலநிலை மாற்றம் வறுமை முதலியவற்றை எதிர்கொள்ளும் வழிமுறைகளை கண்டறியும் நோக்ககுடையது.
குறிக்கோள்கள் வருமாறு:
1.- புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பத்திற்கான – உலகளாவிய மையமாக திகழ்ந்து- சவூதி அரேபியாவின் பங்கை உலகறியச் செய்தல்.
2.- உலகலாவிய சவால்களை எதிர்கொள்வதற்கு சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்.
3.- சவூதியின் பொருளாதாரத்தைத் தூண்டி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல்.
4.- சவூதி அரேபியாவில் சுற்றுலாவை ஊக்குவித்தல்.
எதிர்பார்ப்புகள் வருமாறு:
எக்ஸ்போ 2030 கண்காட்சியானது உலகெங்கிலும் இருந்து 25 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்க்கும் என்றும், சவூதியின் பொருளாதாரத்திற்கு $60 பில்லியன் டொலர்களை ஈட்டித்தரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
உலக எக்ஸ்போ 2030 ஆறு மில்லியன் சதுர மீட்டர் நிலப்பரப்பில் ரியாத்தின் வடமேற்குப் பகுதியில் நடைபெறவுள்ளது. இது கிங் காலித் விமான நிலையத்தில் இருந்து 5 நிமிட தூரத்தில் அமைந்திருக்கும். கண்காட்சித் தளம் ஒரு எதிர்கால நகரத்தின் வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உலக எக்ஸ்போ 2030 இல் 200 இற்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நிறுவனங்கள், சர்வதேச அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போன்ற பிற பங்கேற்பாளர்களும் இருப்பார்கள்.
இது பல்வேறு நிகழ்வுகளை உள்ளடக்கியதாகும். உதாரணமாக- கலை மற்றும் கலாசார கண்காட்சிகள்,- அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநாடுகள், கருத்தரங்குகள், -பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு நடவடிக்கைகள் ஆகியனவாகும்.
உலக எக்ஸ்போ 2030 சவூதி அரேபியாவுக்கு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சவூதியின் சர்தேச நிலையை வலுப்படுத்தவும், பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும் சுற்றுலாத் துறையை வளர்க்கவும் உதவும் என பெரிதும் எதிர்பார்கப்படுகிறது.
கலாநிதி அப்துல் சத்தார்…
தலைவர், இஸ்லாமிய நிலையம் பலகத்துரை,- நீர்கொழும்பு