கைது செய்யப்பட்ட போதகர் ஜெரோம் பெனாண்டோவுக்கு 14 நாட்கள் விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது நாளாக இன்றையதினம் (01) வாக்குமூலம் வழங்குவதற்காக CID யில் ஆஜரான ஜெரோம் பெனாண்டோ கைது செய்யப்பட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, அவரை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, எதிர்வரும் டிசம்பர் 13ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
அவரது சொற்பொழிவுக் கூட்டங்களில் பௌத்த மதம் உள்ளிட்ட ஏனைனய மதங்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் குற்றத்தடுப்பு விசாரணைத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்திருந்த போது, போதகர் ஜெரோம் பெனாண்டோ சில மாதங்களுக்கு முன்னர் நாட்டைவிட்டு வெளியேறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து நேற்றுமுன்தினம் (29) வௌிநாட்டில் இருந்து நாடு திரும்பிய ஜெரோம் பெர்னாண்டோ, 48 மணிநேரத்திற்குள் CID யில் ஆஜராகி வாக்குமூலம் வழங்க வேண்டுமென, நீதிமன்றத்தினால் ஏற்கனவே வழங்கப்பட்ட உத்தரவுக்கமைய நேற்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முதல் நாளாக முன்னிலையாகி 8 மணித்தியாலம் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து இரண்டாம் நாளாக இன்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு அமைய, இன்று (01) காலை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1 comment
Thanks for help sir