பாராளுமன்ற உறுப்பினர்களான டயனா கமகே, சுஜித் சஞ்சய பெரேரா, ரோஹண பண்டார ஆகியோருக்கு ஒரு மாத காலத்திற்கு பாராளுமன்றத்திற்கு வருவதை இடைநிறுத்த, பாராளுமன்ற ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் குழு தீர்மானித்துள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை தொடர்ந்து இடம்பெற்ற சம்பவத்தில் ஒருவருக்கொருவர் தாக்குதல் மேற்கொண்டதாகவும், தாக்க முற்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில் பாராளுமன்ற சிறப்புரிமை குழு மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான தீர்மானத்தை இன்று (01) பாராளுமன்றத்தில், பாராளுமன்ற ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைக் குழுவின் தலைவரான சமல் ராஜபக்ஷ அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Final-Report-Diana-1
1 comment
Thanks for help sir