2022 க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 2022/2023 பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் (Z-Score) வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, பல்கலைக்கழக தகுதி பெற்ற மாணவர்களுக்கு அவர்களின் பல்கலைக்கழகம் மற்றும் பாடநெறி குறித்து இன்று (01) குறுஞ்செய்தி (SMS) மூலம் அவர்கள் பதிவு செய்த தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்கப்படும் என, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
UGC-GCE-AL-Z-Scoreஇம்முறை க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு 274,304 பரீட்சார்த்திகள் தோற்றியதோடு, அவர்களில் 166,967 பரீட்சார்த்திகள் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியை கொண்டுள்ளனர்.
கடந்த முறை பல்கலைகழகத்திற்கு 41,607 பேர் இணைக்கப்பட்டிருந்தனர்.
இதேவேளை, இம்முறை பல்கலைக்கழக அனுமதிக்காக 84,176 மாணவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில், அவர்களில் 42,147 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். கடந்த வருடத்தை விட அதிகமாக 540 பேர் இம்முறை பல்கலைக்கழகத்திற்கு அனுமதிக்கப்படவுள்ளனர்.
பெறுபேறு மீள் பரிசீலனையின் பின்னர் 624 பேரின் பெறுபேறுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் இம்முறை பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்கள் எண்ணிக்கை வருமாறு
- உயிரியல் விஞ்ஞானம் 9,896 பேர்
- பௌதீக விஞ்ஞனாம் 8,071 பேர்
- வணிகம் 7,850 பேர்
- கலை 11,780 பேர்
- பொறியியல் தொழில்நுட்பம் 2,295 பேர்
- உயிரியல் தொழில்நுட்பம் 1,536 பேர்
- மேற்கூறிய எந்தவொரு பாடநெறியிலும் உள்ளடங்காதோர் 719 பேர்