இலங்கையின் மிக உயரமான இடமான தாமரைக் கோபுரத்திலிருந்து மேற்கொண்ட தாவல் நிகழ்வான ‘Base Jump’ இன்று (18) ஆரம்பமானது.
இன்றும் (18) நாளையும் (19) மு.ப. 9.00 மணிக்கு கொழும்பு தாமரைக் கோபுரத்தில் இந்நிகழ்வு இடம்பெறுகின்றது.
இன்று ஆரம்பித்து வைக்கப்பட்ட குறித்த நிகழ்வில் 6 சர்வதேச தாவல் சாகச வீரர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து பி.ப. 4.30 மணிக்கு ஒரு பாய்தலும், அதனைத் தொடர்ந்து பி.ப. 5.30 மணிக்கு ஒரு பாய்தலும் இடம்பெறவுள்ளது.
அதன் பின்னர் மாலை 6.30 மணிக்கு இடம்பெறும் பாய்தலில் வாண வேடிக்கையும் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்குபற்றுபவருக்கும், பார்வையாளர்களுக்கும் உற்சாகமூட்டும், இந்த சிலிர்ப்பான அனுபவம் கொண்ட நிகழ்வில், தாமரைக் கோபுரத்திந் 29ஆவது மாடியில் உள்ள கோபுரத்தின் கண்காணிப்பு தளத்திலிருந்து வீரர்கள் தாவியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வைக் காண வருமாறு தாமரை கோபுர நிர்வாகம் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.