Sunday, November 24, 2024
Home » WhatsApp வங்கிச் சேவை அறிமுகத்துடன் வாடிக்கையாளர்களின் வங்கியியல் அனுபவத்தை மேம்படுத்தியுள்ள அமானா வங்கி

WhatsApp வங்கிச் சேவை அறிமுகத்துடன் வாடிக்கையாளர்களின் வங்கியியல் அனுபவத்தை மேம்படுத்தியுள்ள அமானா வங்கி

by Rizwan Segu Mohideen
August 23, 2023 3:14 pm 0 comment

சௌகரியமான மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய தீர்வுகளை வழங்குவதற்கான தமது அர்ப்பணிப்பின் பிரகாரம், அமானா வங்கியினால், WhatsApp வங்கிச் சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய சேவை வழங்கலுடன், வாடிக்கையாளர்களுக்கு தமது கணக்கு மீதிகளை வங்கியின் WhatsApp இலக்கமான 070 7756 756 இல் ‘Hi’ என டைப் செய்து அனுப்பி அறிந்து கொள்ள முடியும். உள்ளடக்கமான வங்கியியல் அனுபவத்தைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் பல மொழிகளில் உதவிச் சேவைகளும் வழங்கப்படுகின்றன.

வாடிக்கையாளர்களுக்கு சௌகரியமான முறையில் தமது கணக்கு மீதிகளை தமது பதிவு செய்து கொண்டுள்ள மொபைல் இலக்கத்தினூடாக அறிந்து கொள்ள முடியும். இவற்றில் சேமிப்புக் கணக்குகள், நடைமுறைக் கணக்குகள், சிறுவர் சேமிப்புகள், தவணை வைப்புக் கணக்குகள் மற்றும் சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மை மற்றும் கூட்டாண்மைக் கணக்குகள் போன்றன உள்ளடங்குகின்றன. ஒன்றுக்கு மேற்பட்ட கணக்கை கொண்டிருந்தாலும் தமது கணக்குகளை பற்றி உடனுக்குடன் அறிந்து தமது நிதிசார் திட்டமிடல்களை இலகுவாக மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும். ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் இந்தச் சேவை கிடைப்பதுடன், அமானா வங்கியின் WhatsApp வங்கிச் சேவை உச்ச கட்ட பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றுவதுடன், நியம OTP உறுதிப்படுத்தல், பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. இதனூடாக அங்கீகாரமற்ற தகவல் அணுகல்கள் தவிர்க்கப்படுகின்றன.

இந்த அறிமுகம் தொடர்பில் அமானா வங்கியின் AVP – வைப்புகள் மற்றும் டிஜிட்டல் புத்தாக்கம் அர்ஷாத் ஜமால்தீன் கருத்துத் தெரிவிக்கையில், “டிஜிட்டல் புத்தாக்கத்தை நாம் தொடர்ந்தும் முன்னெடுத்து வரும் நிலையில், எமது பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்காக WhatsApp வங்கிச் சேவையை அறிமுகம் செய்துள்ளமை தொடர்பில் அறிவிப்பதையிட்டு பெருமை கொள்கின்றோம். அந்தச் சேவையினூடாக, வாடிக்கையாளர்களுக்கு தமது கணக்கு மீதியை அறிந்து கொள்வதற்காக கிளைகளுக்கு விஜயம் செய்ய வேண்டிய தேவை அல்லது நீண்ட நேரம் அழைப்பில் காத்திருக்க வேண்டிய தேவை போன்றன இல்லாமல் செய்யப்பட்டுள்ளன. அனைத்து இலங்கையர்களுக்கும் அணுகக்கூடிய மற்றும் பிரத்தியேகமான வங்கித் தீர்வுகளை வழங்குவதற்கான அர்ப்பணிப்பை இந்தச் சேவை உறுதி செய்துள்ளது. எதிர்வரும் காலத்தில் எமது WhatsApp சேவையில் மேலும் பல உள்ளம்சங்களை உள்வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளோம். அமானா வங்கியின் WhatsApp வங்கிச் சேவை என்பது வங்கியின் உள்ளக அணியினால் அதன் பிரதம தகவல் அதிகாரி மொஹமட் கியாசுதீனின் தலைமைத்துவத்தின் கீழ் முழுமையாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

WhatsApp வங்கிச் சேவையை மேற்கொள்வதற்கும், கணக்கு மீதிகளை அறிந்து கொள்வதற்கும், வாடிக்கையாளர்கள் அமானா வங்கியின் உத்தியோகபூர்வ WhatsApp இலக்கமான (070 7756 756) ஐ தமது contacts இல் பதிவு செய்து வைத்திருக்க வேண்டும்.

இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்வதுடன், வங்கியின் 29.97% பங்குகளை தன்வசம் கொண்டுள்ளது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியின் முன்னோடியான செயற்பாட்டாளர் எனும் வகையில், உலகின் சிறந்த 100 உறுதியான இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக அமானா வங்கியை ஏசியன் பாங்கர் இனால் தெரிவு செய்யப்பட்டிருந்தது.

OrphanCare இன் ஸ்தாபக அனுசரணையாளர் எனும் தனது ஈடுபாட்டுக்கு அப்பால், அமானா வங்கி எந்தவொரு துணை நிறுவனங்கள் அல்லது இணை நிறுவனங்களையும் கொண்டிருக்கவில்லை.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT