766
நைகரில் மூன்று ஆண்டு ஆட்சி மாற்றக் காலத்திற்கு அந்நாட்டில் இராணுவ சதிப்புரட்சியில் ஈடுபட்ட தலைவர்கள் மேற்கு ஆபிரிக்க தலைவர்களின் குழுவை சந்தித்த பின் உறுதி அளித்துள்ளனர்.
எனினும் எந்த ஒரு தாக்குதலும் சும்மா விடப்படமாட்டாது என்றும் எச்சரித்துள்ளனர். கடந்த சனிக்கிழமை (21) இரவு தேசிய தொலைக்காட்சியில் உரையாற்றிய ஜெனரல் அப்துர்ரஹ்மானே டச்சியானி, ஆட்சி மாற்றம் தொடர்பில் விரிவான எந்த விபரத்தையும் கூறவில்லை.
ஆனால் ஆளும் இராணுவ சபையால் நடத்தப்படும் பேச்சுவார்த்தை ஒன்றில் 30 நாட்களுக்குள் இது பற்றி தீர்மானிக்கப்படும் என்று கொள்கை அளவில் ஏற்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.