975
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று (21) காலை 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ளது.
இந்நிலையில் நேற்று (20) மாலை வைரவர் உற்சவமும் சப்பர வெள்ளோட்டமும் இடம்பெற்றது.
நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு புதிய சப்பரம் கட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது பெருமளவான பக்தர்கள் வடம் பிடித்து சப்பரத்தை இழுத்து சப்பர வெள்ளோட்டத்தில் பங்கேற்றனர்.