Sunday, November 24, 2024
Home » இம்தியாஸ் எம்.பி எழுதிய ‘சிந்திப்போம்’ நூல் வெளியீடு

இம்தியாஸ் எம்.பி எழுதிய ‘சிந்திப்போம்’ நூல் வெளியீடு

by sachintha
August 15, 2023 4:24 pm 0 comment

பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் எழுதிய ‘சிந்திப்போம்’ எனும் சிங்கள மொழிமூலமான நூல் வெளியீட்டு வைபவம் கொழும்பு 7 இல் உள்ள இலங்கை மன்றக் கல்லூரியின் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதமர் தினேஷ் குணவர்தன, பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, எதிர்க்கட்சிச் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் சர்வமதத் தலைவர்கள், பாரளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்காரின் நண்பர்கள், பேருவளை தொகுதி ஆதரவாளர்கள், குடும்ப உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்நூல் பற்றிய விமர்சன உரைகளை பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி அத்துலசிறி சமரக்கோன், சிரச சிரேஷ்ட ஊடகவியலாளர் சந்தன சூரியபண்டார, இளம் ஊடகவியலாளர் ஹரிந்து உடுவரகெதர ஆகியோர் ஆற்றினர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய நூலாசிரியர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் உரையாற்றுகையில்,

“கடந்த ஜந்து வருடகாலமாக இலங்கையில் வெளிவரும் தேசிய சிங்களப் பத்திரிகைகளில் வெளிவந்த இனஐக்கியம், ஏனைய நாடுகளுடன் இலங்கையின் ஒப்பீடுகள், இளம் சந்ததிகள், நாளைய தலைவர்கள், நற்சிந்தனை, தேசிய நல்லிணக்கம் தொடர்பான கட்டுரைகளை தொகுத்து இந்நூலை வெளியிட்டுள்ளேன்.

இந்நூல்களை 50 வீத விலைக்கழிவில் கொடகே நிறுவனர் அச்சிட்டுத் தந்துள்ளார். அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். இந்நூலை விட மேலும் ஓர் நூல் எழுதுகின்றேன். அதில் எனது அரசியல் பயணம் மற்றும், பாடசாலை நினைவுகள், பல்கலைக்கழகம், வாழ்க்கை, சட்டக் கல்லூரி, அரசியல் நண்பர்கள் தொடர்பான அனுபவங்களை எழுதுகின்றேன். அந்நூல் அடுத்த மாதமளவில் வெளியிடப்படும். ஏற்கனவே ஐந்து நூல்கள் வெளியிட்டுள்ளேன்” எனக் குறிப்பிட்டார்.

அத்துடன் தமிழ், முஸ்லிம் நண்பர்கள், ஆதரவாளர்களுக்காக எனது நூலை தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுவதற்கும் முயற்சி செய்கின்றேன்” என்று அவர் மேலும் கூறினார்.

(தெஹிவளை-கல்கிசை விசேட நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT