பிரேசிலின் சாவ் பாலோவில் உள்ள மிக நீளமான நதியாக கருதப்படும் ‘Tiete’ நதி நச்சு நுரையால் மூடப்பட்டுள்ளது.
சாவோ பாலோவில் மிகவும் மாசுபட்ட நதியாக டைட் நதி பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக இப்பகுதியின் முக்கிய நீர் ஆதாரமாக இந்நதி கருதப்படுகிறது.
எனினும், தற்போது டைட் நதி நச்சு நுரையால் மூடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், டைட் ஆற்றின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்று வீசுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பிரேசிலில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமான சாவோ பாலோவில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் நச்சு நுரை காரணமாக ஆற்றில் ஏராளமான நீர்வாழ் உயிரினங்கள் இறந்துள்ளதாகவும் இவற்றின் மூலம் மீனவ சமூகம் கடுமையான பாதிப்பை எதிர் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு காணப்படும் பல்வேறு தொழிற்சாலைகள் மூலம் ரகசியமாக ஆற்றில் கலக்கப்படும் ரசாயனங்கள் தான் இவற்றிற்கு காரணம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.
டைட் நதி சில காலமாக இதுபோல் மாசுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 2021ஆம் ஆண்டு தியெட் ஆற்றில் 85 கிலோமீட்டர் நீளமுள்ள பகுதியில் இந்த நுரைத் தன்மை காணப்பட்டதுடன் 2022ல் இது 40 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சாவோ பாலோவில் டைட் நதி மிகவும் மாசுபட்ட நதியாக பட்டியலிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.