தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓச்சா அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் நடபெற்ற பொதுத் தேர்தலில் அவரின் தலைமையிலான யு.டி.என் கட்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
இது குறித்து தனது பேஸ்புக் பதிவில் கூறியதாவது,
யு.டி.என் கட்சித் தலைமையிலிருந்து விலகுவதன் மூலம் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக முடிவு செய்துள்ளேன்.
கட்சியின் பிற தலைவர்களும் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களும் கட்சிக் கொள்கையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று தனது முகநூல் பதிவில் பிரயுத் தெரிவித்துள்ளார்.
2014ஆம் ஆண்டிலிருந்து தாய்லாந்து அரசியல் ரீதியாக நிலையற்ற தன்மை காணப்பட்ட போது அந்நாட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றி ராணுவத் தளபதியாக பதவி வகித்த பிரயுத் சான் ஓச்சா பிரதமரானார்.
பின்னர் 2019 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அவரது கட்சி 23.34 சதவீத வாக்குகளைப் பெற்று முதலிடம் பிடித்தது.
எனினும் இந்த ஆண்டு நடைபெற்ற அடுத்த தேர்தலுக்கான
கணக்கெடுப்பில் இவரது கட்சி 5வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
பிரயுத் சான் ஓச்சாவுக்கு தற்போது 69 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.