கட்டுப்பாடின்றி புரண்ட பஸ்; 8 பேர் வைத்தியசாலையில்

Rizwan Segu Mohideen
றிஸ்வான் சேகு முகைதீன்
 
வேகக் கட்டுப்பாட்டை இழந்த, ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுடன் சென்ற பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் 8 பெண்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்.
 
இப்பாகமுவ - மடகல்லை வீதியில், நேற்று (04) இரவு, குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
முன்னால் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட வேளையில், குறித்த மோட்டார் சைக்கிளின் மீது பஸ்ஸின் பகுதி மோதியுள்ளது.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"12519","attributes":{"alt":"","class":"media-image","height":"449","style":"font-size: 13.008px; line-height: 20.0063px;","typeof":"foaf:Image","width":"673"}}]]
 
இதன்போது, பஸ்ஸின் வேகத்தை கட்டுப்படுத்த முயன்ற வேளையில், அருகிலிருந்த வயல் நிலத்திற்குள் பஸ் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
 
இதனை அடுத்து அதில் பயணித்த 8 பேர் காயங்களுக்குள்ளாகி கொகரெல்ல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"12520","attributes":{"alt":"","class":"media-image","height":"388","typeof":"foaf:Image","width":"673"}}]]
 
ஆயினும், குறித்த 8 பேரும் எவ்வித உயிர் ஆபத்துகளுமின்றி சிறு காயங்களுடன் இருப்பதாக கொகரெல்ல மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி கே.பி. ரத்நாயக்க தெரிவித்தார்.
 
மோட்டார் சைக்கிளை செலுத்தியவரும் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு, கொகரெல்ல பொலிஸார் இது குறித்த விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Add new comment

Or log in with...