ஸ்ரீலங்கா ரெலிகொம்மின் ‘கொவுல் நாதே’

ஸ்ரீலங்கா ரெலிகொம், தமிழ், சிங்களப் புத்தாண்டின் உதயத்தை சமீபத்தில் வரவேற்றுள்ளது. இதற்கென இம்மாதம் 6 ஆம் திகதி சிங்களப் பாரம்பரிய புதுவருடமுறைப்படி, விருந்துபசாரத்துடனான வைபவம் சின்னமன் கிரான்ட், நுக கமவில் இரண்டாவது வருடமாகவும் நடைபெற்றது. ‘SLT கொவுல் நாதே 2016’ என்ற தொனிப்பொருளிலான நிகழ்ச்சி, ஸ்ரீலங்கா ரெலிகொம் மற்றும் ஊடகத் துறையினருக்கு இடையிலான உறவுகளை மேலும் அபிவிருத்தி செய்யும் நோக்கத்தில் ஊடகத்தினருக்கென விசேடமாக ஒழுங்கு செய்யப்பட்டது.

ஸ்ரீலங்கா ரெலிகொம்மின் கொவுல் நாதே பதாகை, தாமரை மலர்களினால் அமைக்கப்பட்ட அதேசமயத்தில், அந்தப் பூங்காவில் மலர் மாலைகளின் அலங்காரம் மக்களைப் பிரமிக்க வைத்தது. பாரம்பரிய புதுவருட விளையாட்டுப் போட்டிகளிலும், களியாட்ட விழாக்களிலும் சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் பங்குபற்றுவதை பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர். புளி மற்றும் இஞ்சிச் சுவையுடன் அம்பரெல்லா கொண்டு தயாரிக்கப்பட்ட மென்பானங்களை அவர்கள் அருந்தி பரஸ்பரம் கலந்துரையாடியுள்ளனர்.

அங்கு சமூகமளித்திருந்தவர்களை திரு. வஜிர ஜயவர்தன மகிழ்ச்சியுடன் வரவேற்றதோடு, நிகழ்ச்சிகளை ஆரம்பிப்பதற்காக பாரம்பரிய மங்கல விளக்கு ஏற்றும் நிகழ்ச்சியில் பங்குபற்றும்படி ஸ்ரீலங்கா ரெலிகொம்; சிரேஷ்ட முகாமைத்துவ அங்கத்தவர்களுக்கும், ஊடகத்துறையின் முக்கிய பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுத்தார்.

[[{"type":"media","view_mode":"media_original","fid":"12134","attributes":{"alt":"","class":"media-image","height":"490","typeof":"foaf:Image","width":"673"}}]]

ஸ்ரீலங்கா ரெலிகொம் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. திலீப விஜேசுந்தர அங்கு உரைநிகழ்த்துகையில், ‘ஒரு குழுவினராக நாம் இன்று பிரதிநிதித்துவப்பட்டுள்ளோம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார். கடந்த 12 மாத காலத்தில் ஸ்ரீலங்கா ரெலிகொம் பெற்றுக்கொண்ட முக்கிய பெறுபேறுகள் பற்றி அவர் விபரித்துக் கூறினார். ‘இந்த ஆண்டு முடிவடையும் சமயத்தில் ஸ்ரீலங்கா ரெலிகொம் மூலம் நாட்டின் ICT துறையில் குறிப்பிடத்தக்க அபிவிருத்தியை நாம் காணவிருக்கின்றோம் என்றுகூறி ஸ்ரீலங்கா ரெலிகொம் வெற்றியில் ஊடகத்துறை முக்கிய பங்கை வகிக்கிறது என்று அறிவித்ததோடு, ஸ்ரீலங்கா ரெலிகொம்மும் ஊடகத்துறையும் மேலும் நெருங்கிய விதத்தில் பணியாற்றும் என நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

திரு. விஜேசுந்தரவின் உரையை அடுத்து, ஸ்ரீலங்கா ரெலிகொம் தலைவர் திரு. குமாரசிங்க சிறிசேன கருத்து வெளியிடுகையில், ஸ்ரீலங்கா ரெலிகொம் மற்றும் ஊடகத்துறைக்கும் இடையிலான உறவுகளின் பெறுமானங்கள் பற்றி விளக்கிக் கூறினார். நாட்டிற்கு சிறந்த எதிர்காலத்தை உறுதிசெய்வதற்கு ஊடகத்துறையும் ஸ்ரீலங்கா ரெலிகொமும் இணைந்து பணியாற்ற உதவும்படி அவற்றின் அங்கத்தவர்களுக்கு அழைப்பு விடுத்த ஸ்ரீலங்கா ரெலிகொம் தலைவர் சிறிசேன, ஒவ்வொரு தரப்பினரும் எதிர்நோக்கும் சவால்கள் இருந்த போதிலும், மக்களின் நன்மையை இலக்காகக் கொண்டே நாம் அனைவரும் பணியாற்றுகின்றோம் என்பதை நினைவில் வைத்திருப்பது முக்கியமாகும் என்றும் குறிப்பிட்டார்.

கவர்ச்சிகரமான மாலைப்பொழுதில் பல்வேறு மகிழ்ச்சியூட்டும் நிகழ்ச்சிகள் இடம்பெற்றதோடு, இராப்போசன விருந்தும் நடைபெற்றது. ஸ்ரீலங்கா ரெலிகொம் மற்றும் ஊடகத்துறை என்பனவற்றின் அங்கத்தவர்கள் இந்த நிகழ்வுகளில் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர்.


Add new comment

Or log in with...