பொலிஸ் மாஅதிபராக பூஜித் ஜயசுந்தர நியமனம் | தினகரன்

பொலிஸ் மாஅதிபராக பூஜித் ஜயசுந்தர நியமனம்

Rizwan Segu Mohideen
றிஸ்வான் சேகு முகைதீன்
 
34 ஆவது பொலிஸ் மாஅதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார்.
 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்றைய தினம் (20) அவர் தனது நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார்.
 
10 உறுப்பினர்களைக் கொண்ட அரசியலமைப்பு சபையில் மேற்கொண்ட வாக்கெடுப்பின் அடிப்படையில் அதிகமானோரின் விருப்பத்திற்கு இணங்க மேற்கொள்ளப்பட்ட சிபாரிசின் அடிப்படையில், ஜனாதிபதியினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
இதேவேளை, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் எம்.எம். விக்ரமசிங்க மற்றும் சிரேஷ்ட உதவி பொலிஸ் மாஅதிபர் சந்தன விக்ரமரத்ன ஆகியோரது பெயர்களும் அரசியலமைப்பு சபையின் சிபாரிசுக்கான வாக்கெடுப்பில் இடம்பெற்றிருந்த போதிலும் அதிக வாக்குகளைப் பெற்ற பூஜித் ஜயசுந்தரவே பொலிஸ் மாஅதிபர் பதவிக்காக சிபாரிசு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Add new comment

Or log in with...