கிரிக்கெட் தலைமைத்துவம் மெத்திவ்ஸ், சந்திக்கு

பதிப்பு 02
இதேவேளை ரி20 உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
 
அதன்படி பின்வரும் 15 வீரர்கள், புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் சபையின் தெரிவுக்குழுவினரால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
 
குறித்த அணியில், உபாதை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அணியில் இணைக்கப்படமாட்டார் என எதிர்பார்க்கப்பட்ட லசித் மாலிங்கவும் உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
1. அஞ்சலோ மெத்திவ்ஸ் (தலைவர்)
2. தினேஷ் சந்திமால் (உப தலைவர்/ விக்கட் காப்பாளர்)
3. ரி.எம். டில்ஷான்
4. லஹிரு திரிமான்ன
5. செஹான் ஜயசூரிய
6. மிலிந்த சிறிவர்தன
7. சாமர கபுகெதர
8. தசுன் ஷானக
9. திசர பெரேரா
10. நுவன் குலசேகர
11. துஷ்மந்த சமீர
12. ரங்கன ஹேரத்
13. சுரங்க லக்மால்
14. சசித்ர சேனாநாயக்க
15. லசித் மாலிங்க
 

பதிப்பு01
ரி20 உலக கிண்ணத் தொடருக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைத்துவம் அஞ்சலோ மெத்திவ்ஸுக்கு வழங்கப்பட்டுள்ளது.
 
நேற்றிரவு (07) நியமிக்கப்பட்ட புதிய கிரிக்கெட் தெரிவுக்குழுவினாலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
 
இதேவேளை, இலங்கை அணியின் உப தலைவராக தினேஷ் சந்திமால் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
இலங்கை ரி20 அணிக்கு தலைமை வகித்த லசித் மாலிங்க நேற்றையதினம் (07) அணியின் தலைமைத்துவத்திலிருந்து நீக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
உபாதை காரணமாக, பங்களாதேஷில் இடம்பெற்ற ஆசியா கிண்ணத் தொடரின் ஒரேயொரு போட்டியில் மாத்திரமே மாலிங்க பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

There is 1 Comment

Add new comment

Or log in with...