தஜிகிஸ்தானில் பாரிய நிலநடுக்கம்; இந்தியா, பாகிஸ்தானில் அதிர்வு

பதிப்பு02
தஜிகிஸ்தானின் தலைநகரிலிருந்து கிழக்காக 130 கிலோமீற்றர் தொலைவிலேயே குறித்த பூகம்பம் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரவிக்கின்றன.
 
அந்நாட்டு நேரப்படி பி.ப. 12.50 இற்கு (இலங்கையில் பி.ப. 12.20) குறித்த நிலநடுக்கம்  ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, உயிரிழப்புகள் குறித்து இது வரை எவ்வித உத்தியோகபூர்வ வெளியீடும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

பதிப்பு01
 
மத்திய ஆசியாவிலுள்ள தஜிகிஸ்தான் மலைத் தொடர் பகுதியில் பாரிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
 
றிச்டர் அளவில் 7.2 என பதிவான இந்நிலநடுக்கம், ஆப்கானிஸ்தான், இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலைநகரங்களில் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"7943","attributes":{"alt":"","class":"media-image","height":"676","typeof":"foaf:Image","width":"535"}}]]
 
குறித்த பகுதியிலுள்ள வீடுகள், நிலநடுக்கத்தை தாங்கும் வகையில் அமைக்கப்படுவதில்லை என்பது, இதனால் ஏற்படும் பாதிப்பை அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"7944","attributes":{"alt":"","class":"media-image","height":"406","style":"width: 678px; height: 406px;","typeof":"foaf:Image","width":"678"}}]]
 
பாதிப்பு குறித்து இதுவரை எவ்வித தகவலும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
(earthquake-report.com)

Add new comment

Or log in with...