இழுபறியாகும் வித்தியா கொலை வழக்கு

கும்பலாக பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட புங்குடுதீவைச் சேர்ந்த மாணவி சிவலோகநாதன் வித்தியா  கொலை வழக்கின் சந்தேகநபர்களை எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
 
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 9 பேரும் இன்று (01) ஊர்காவற்றுறை நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டபோதே அவர் இவ்வுதரவை பிறப்பித்தார்.
 
வித்தியாவின் மரபணு பரிசோதனை அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாமையே இன்றைய தினம் வழக்கு ஒத்திவைக்கப்பட்டமைக்கு காரணமாகும்.

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...