ரி20 தொடரை பகிர்ந்த மே.இ தீவுகள் - இலங்கை

ஆர். பிரேமதாச மைதானத்தில் இலங்கை அணி விளையாடிய 10, ரி20 போட்டிகளில் 9 போட்டிகளில் தோல்வி
 
இலங்கையுடனான இரண்டாவது ரி20 போட்டியை மேற்கிந்திய தீவுகள் அணி 23 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
 
நேற்று (11) பகலிரவு ஆட்டமாக கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற ரி20 தொடரின் இரண்டாவதும் இறுதியுமான போட்டியில் மேற்கிந்திய அணி வெற்றி பெற்றது. 
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"6958","attributes":{"alt":"","class":"media-image","height":"655","style":"width: 650px; height: 473px;","typeof":"foaf:Image","width":"900"}}]]
 
டில்சான் துடுப்பாட்டத்தில்...

 
இதன் மூலம் 1-1 என தொடர் சமனிலைப்படுத்தப்பட்டதோடு, கிண்ணத்தை இரு அணிகளும் பகிர்ந்து கொண்டனர்.
 
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"6959","attributes":{"alt":"","class":"media-image","height":"634","style":"width: 650px; height: 458px;","typeof":"foaf:Image","width":"900"}}]]

       குசல் பெரேரா ஆட்டமிழந்தபோது...


 
அதன் அடிப்படையில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 162 ஓட்டங்களை பெற்றது.
 
சார்ள்ஸ் 34 (21) ராம்தின் 34(22)*, பிராவோ 31 (31) ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தனர்.
 
இலங்கை அணி சார்பில் மலிங்க, மிலிந்து தலா 2 விக்கெட்டுகளையும், சமீர 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
 
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு ஆரம்பத்தில் டில்சானின் அதிரடி ஆட்டம் பாரிய பலமாக அமைந்த போதிலும் பின்னர் களத்திற்கு வந்த வீரர்கள் பெரிதாக சோபிக்காததால் தோல்வியைச் சந்திக்க நேரிட்டது. இதனால் 20 ஓவர் முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 139 ஓட்டங்களையே பெற்றது.
 
டில்சான் 52 (38), செஹான் ஜயசூரிய 30 (32), சிறிவர்தன 15 (11) ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தனர்.
 
மேற்கிந்திய தீவுகள் அணிக்காக பிராவோ 4 விக்கெட்டுகளையும், ராம்போல் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
 
இதன் அடிப்படையில் 23 ஓட்டங்களால் மேற்கிந்திய தீவுகள் வெற்றி பெற்றது.
 
இது வரை ஆர். பிரேமதாச மைதானத்தில் இலங்கை அணி விளையாடிய 10 போட்டிகளில் 9 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Add new comment

Or log in with...