ஞானசாரவை கைது செய்ய உத்தரவு

வழக்கு தொடர்பில் நீதிமன்றில் ஆஜராகாத பொது பல சேனா செயலாளர் ஞானசார தேரவை கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
 
பரிசுத்த குர்ஆனை அவமதித்த குற்றச்சாட்டு, தேசிய பலசேனாவின் ஊடக மாநாட்டிற்குள் அத்துமீறி நுழைந்தமை மற்றும் அதற்கு இடைஞ்சல் விளைவித்தமை போன்ற குற்றச்சாட்டுகளுடன் தொடர்பிலேயே குறித்த வழக்கு ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
இவ்வழக்கு இன்று (12) எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில் குற்றம்சாட்டப்பட்ட ஞானசேர தேரர் மற்றும் இருவர் நீதிமன்றில் ஆஜராகவில்லை என்பதால், மூவரையும் கைது செய்யுமாறு கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
 
இவ்வழக்கு தொடர்பான வீடியோ பதிவு, மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள போதிலும் இதுவரை, அது தொடர்பிலான எவ்வித அறிக்கையையும் அவர்கள் சமர்ப்பிக்கவில்லை என நீதிமன்றில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
கோட்டை நீதிமன்ற நீதிபதி பிரியந்த லியனகே இவ்வழக்கை எதிர்வரும் நவம்பர் 09ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.
 

There are 4 Comments

Add new comment

Or log in with...