கடவத்தை வரையான நெடுஞ்சாலை இன்று திறப்பு

கொழும்பு வெளிநோக்கிய சுற்றுவட்ட அதிவேக பாதையின் கடுவெலையிலிருந்து கடவத்தை வரையான பகுதி இன்று (17) பிற்பகல் 3.00 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது.
 
ஒன்பது கிலோ மீற்றர் தூரம் கொண்ட இப்பாதை உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்ட பின்னர் இன்று (17) 9.00 மணியளவில் பொதுமக்கள் பாவனைக்காக அனுமதிக்கப்படும் என பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் டி.சி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
 
அத்துடன் கொழும்பு வெளிநோக்கிய சுற்றுவட்ட அதிவேக பாதையிலுள்ள அதுருகிரிய புதிய பரிமாற்ற மையம் மற்றும்  களனி கங்கையின் ஊடாக நிர்மாணிக்கப்பட்டிருக்கும் பாலங்கள் இரண்டும் திறக்கப்படும்.
 
இதன் காரணமாக கடுவெல நகரில் ஏற்படுக்கூடிய போக்குவரத்து நெரிசல்  குறையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
 

Add new comment

Or log in with...