அரசியலமைப்பு சபையின் முதலாவது அமர்வு இன்று

19ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கு அமைய, புதிதாக அமையப் பெற்றுள்ள பாராளுமன்ற அரசியலமைப்பு சபையின் முதலாவது அமர்வு இன்று (10) பகல் 12 மணிக்கு ஆரம்பமாகிறது.
 
சபாநாயகர் சமல் ராஜபக்‌ஷவின் தலைமையில் பாராளுமன்ற கட்டடத்தில் இக்கூட்டம் இடம்பெறவுள்ளது.
 
இச்சபை பத்து பேரை உள்ளடக்கியுள்ளதோடு சபாநாயகர் இச்சபைக்கு தலைமை வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் சபாநாயகர் ஆகியோர் நேரடியாக இதில் உள்வாங்கப்படுகின்றனர்.
 
மேலும் ஜனாதிபதியின் பிரதிநிதியாக அமைச்சர் சம்பிக ரணவகவும், பிரதமரின் பிரதிநிதியாக அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷவும், எதிர்க்கட்சித் தலைவரின் பிரதிநிதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி எம். சுமந்திரனும், சிறுபான்மை கட்சி சார்பில்  ஜே.வி.பியின் பிரசாரச் செயலாளர் விஜித ஹேரத்தும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
இச்சபை, நாட்டுக்கு அத்தியவசியமான 9 ஆணைக்குழுக்களை நியமித்து, அதனை கண்காணிக்கும் பணியை மேற்கொள்ளவுள்ளது.
 
அதன்படி, இதுவரை ஏழு பேர் இச்சபையில் உள்வாங்கப்பட்டுள்ளனர். சிவில் சமூகத்தைச் சேர்ந்த மூவர் இதுவரை நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஆயினும் இன்று 12.00 மணிக்கு முதல் அவர்களும் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Add new comment

Or log in with...