பெண்களின் முன்னேற்றம் சிறப்படையவில்லை

 பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்த வண்ணமே உள்ளன. இதனைக் கருத்தில் கொண்டு பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையை அரசு நிறுவியுள்ளது. மேலும் நாட்டின் பிரதான காவல் நிலையங்களில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறையைக் கண்காணிப்பதற்கென்று பிரத்தியேக பிரிவு ஒன்றும் அமைக்கப் பட்டுள்ளது.

இச் செயற்பாடானது வரவேற்கத்தக்கது. இந்தியாவில் முன்னர் கல்வி கற்றவர் குறைவு, அதிலும் பெண்கள் மிகக் குறைவு, அக்கால கட்டத்தில் வாழ்ந்த ஔவையார், காரைக் கால் அம்மையார் மற்றும் ஆண்டாள் என்னும் புலவர்களின் படைப்புக்களால் பெண்மை மேன்மை அடைந்தது.

பெண்கள் தங்கள் முன்னேற்றத்தால் உயர்வு பெற்றாலும் இன்றும் அவர்கள் முற்றிலுமாக சிறப்படையவில்லை. வரதட்சணைக் கொடுமை, முப்பத்து மூன்று இட ஒதுக்கீடு வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றமை என்பவையெல்லாம் பெண்களின் அவலநிலையை எடுத்துக்காட்டுகின்றன.

இந்தியாவின் முதல் காவல்துறை அத்தியட்சகர், கிரன்பேடியும், விமான ஓட்டுநரான துர்க்கா பானர்ஜியும், ஆங்கிலக்கால்வாயை நீந்திக் கடந்தவரான ஆர்த்திஷாவும் விண்வெளிச் சாதனைக்கு வித்திட்டு மறைந்த கல்பனா சாவ்லா என்பவரும், பேருந்து ஓட்டுநர் வசந்த குமாரியும், பெண்ணிகளின் பெருமையை வெளி உலகிற்கு பறை சாற்றியவர்களாவர்.

நம்நாட்டைப் பொறுத்தவரை பாடசாலை மற்றும் கல்லூரிகளில் மகளிர் கல்வி சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. பெண்கள் தங்கள் கல்விமூலம் பல்கலைக்கழகங்களில் மாவட்ட அளவிலும், மாகாணமட்டத்தில் அதிசிறந்த மதிப் பெண்களைப் பெற்று சாதனை புரிந்து வருகின்றனர். ஆரம்ப பாடசாலைகளில் ஆசிரியைகளாக பெரும்பாலும் மகளிரையே கல்வி அமைச்சு நியமிக்கின்றது.

மருத்துவராக பொறியியலாளராக, துணை வேந்தராக, நீதிபதியாக , பிரதம மந்திரியாக, ஜனாதிபதியாக பல்வேறு அதி உன்னத பொறுப்புக்களி லிருந்து தமது செயற்திறனைக்காட்டி பெருமை பெற்றுத் திகழ்பவள் பெண். பெண் கல்வியால் வீட்டின்தரம் உயரலாம், அவலங்களும் அகன்று விடும். சமூகத்தின் பால்நிலை சமத்துவமின்மை காரணமாக மகளிர் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

ஐக்கிய நாடுகள் சபையினால் உருவாக்கப்பட்ட பெண்களுக்கு எதிரான வன்செயல்களை இல்லாதொழித்தல் தொடர்பான உடன்படிக்கையை இலங்கை 1981ம் ஆண்டு கைச்சாத்திட்டது. இந்த உடன்படிக்கையின் பிரகாரம் பெண்கள் பாரபட்சங்களிலிருந்து பாதுகாப்புப்பெறும் உரிமை, அரசியலில் பங்கு பற்றுதல், கல்வி, வேலைவாய்ப்பு பெறும் உரிமை போன்ற பல்வேறு உரிமைகளைக் குறிக்கின்றது.

ஐ.நா உடன்படிக்கையில் பெண்ணுரிமைச் சட்டம், பெண்கள் முகம்கொடுக்கும், வன்முறைகளுக்கு எதிரான சட்டம், குடியியல் நடவடிக்கைக்கோவை திருத்தம், குடியியல் சட்டம், பராமரிப்பு கட்டளைச் சட்டம், பெண்கள் தொடர்பான சாஸனம் என்பன உள்ளடங்குகின்றன. அக் காலகட்டத்தில் வாக்குரிமை வழங்கப்படுவது தொடர்பாக கேள்வி எழுந்த போது பெரும்பாலான ஆண்கள் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கக் கூடாதென்பதில் ஒருமித்த கருத்தைக்கொண்டிருந்தனர்.

எனினும் அன்றைய பெண்கள் வாக்குரிமைச் சங்கம் அமைத்து பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கப்படவேண்டும் என்பதை டொனமூர் ஆணைக்குழு முன்சாட்சியம் அளித்தனர். அதில் வெற்றியும் கண்டனர். 1931ம் ஆண்டு இலங்கை சட்ட சபைக்கான முதலாவது பெண் பிரதிநிதி தெரிவானார். இவர் ருவன்வெல தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற எட்வின் மொலமூரே ஆவார். இதனைத் தொடர்ந்து 1932 இல் நடைபெற்ற இடைத் தேர்தலின்போது நேசம் சரவணமுத்து வடகொழும்பு ஆசனத்திற்கு தெரிவானார்.

 

 


There is 1 Comment

NO

Pages

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
14 + 2 =
Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.

Or log in with...