வரவு செலவுத் திட்டம் 2017; ஒரே பார்வையில்

 

றிஸ்வான் சேகு முகைதீன்

 

முழு வரவு செலவுத் திட்ட உரையை இங்கே பார்வையிடலாம்....

5.20pm - சிம் அட்டையை செயற்படுத்துவற்கு, செயற்படுத்தும் கட்டணமாக ரூபா 200 அறவிடப்படும்.

5.18pm - அனைத்து கையடக்க தொலைபேசி வலையமைப்பு சேவை வழங்குனர்களும், அவர்களது அடிப்படை வசதிகள், 3G வசதிகள் போன்றவற்றை வழங்குவதற்கு 6 மாத காலம் வழங்கப்படும் என்பதோடு, குறித்த 6 மாத காலத்தினுள், 3G வசதிகளை வழங்க தவறும் சேவை வழங்குனர் மீது, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ரூபா 100 மில்லியன் மேலதிக அபராதம் விதிக்கப்படும். அனைத்து நகர எல்லைகளும் 2018 ஜூன் 30 அளவில், 4G நிலைக்கு மாற்றப்படும்.

5.17pm - போக்குவரத்து தொடர்பான தவறை, ஸ்தான அபராதமாக அமுல்படுத்து தொடர்பில், அது மீள வகைப்படுத்தப்படும் என்பதோடு, மிகக் குறைந்த அபராதத் தொகை ரூபா 2,500 ஆக அதிகரிக்கப்படும்.

5.15pm - இறக்குமதி செய்யப்படும் திரவ நிலை தவிர்ந்த மதுபானம் மீது, ரூபா 25 கலால் வரி அறவிடப்படும்.

5.13pm - 350 மில்லி லீற்றரிற்கு குறைவான தகரத்தில் அடைக்கப்பட்ட மதுபானத்திற்கு ரூபா 10 மற்றும் 350 மில்லி லீற்றரிற்கும் அதிகமான தகரத்தில் அடைத்த மதுபானத்திற்கு ரூபா 15 வரி அறவிடப்படும்.

5.10pm - திரவ மதுபான இறக்குமதி தொடர்பில், ஒரு லீற்றருக்கு ரூபா 800 இறக்குமதி வரி அறவிடப்படும்.

5.08pm - இணையத்தள சேவை மீதான தொலைத் தொடர்பு கட்டணம் 25% ஆக அதிகரிக்கப்படும்

5.06pm - அசையா சொத்துகளை விடுவிப்பதன் மூலமான இலாபம் தொடர்பில் 10% மூலதன ஆதாய வரி

5.03pm - பழைய வாகனங்களை ஏற்றுமதி செய்வதற்கு வரிச் சலுகை

5.59pm - 100 பொருட்களுக்கு செஸ் வரியிலிருந்து விலக்களிப்பு

4.58pm - உழவு இயந்திரங்கள், இலத்திரனியல் மோட்டார் வாகனம் தவிர்ந்த ஏனைய வாகனங்களுக்கு புதிய காபன் வரி அறவிடப்படும்.

4.55pm - சமுர்த்தி பெறுனருக்கு மாதாந்தம் 5 கிலோ அரசி வழங்குதல்.

4.52pm - தேசிய தகரத்தில் அடைக்கப்பட்ட 425g ரின் மீனின் விலை ரூபா 125 ஆக மாற்றுதல்.

4.51pm - தேசிய 400g பால்மாவின் விலை ரூபா 250 ஆக பேணுதல்.

4.50pm - தன்னியக்க பணப் பரிமாற்ற இயந்திரம் (ATM) மூலம் பணம் மீளப் பெறுவதற்கான கட்டணம் ரூபா 10 ஆக அதிகரிக்கப்படும்.

விலைக்குறைப்பு

4.46pm - அதிவேக வீதியில் பி.ப. 9.00 - மு.ப. 5.00 பயணிப்பதற்கு - Rs.50

விலைக்குறைப்பு

4.45pm
வீட்டு பாவனை எரிவாயு - ரூபா 25

பாசிப் பயறு - ரூபா 15

பருப்பு - ரூபா 10

மண்ணெண்ணெய் - ரூபா 5

நெத்தலிக் கருவாடு - ரூபா 5

சீனி (வெள்ளை) - ரூபா 2

உருளை கிழங்கு - ரூபா 5

4.44pm - அத்தியவசிய நுகர்வு பொருட்கள் தொடர்பில் 'சதொச' வலையமைப்பு விஸ்தரிக்கப்படும். 100 சதொச நிலையங்கள் அமைப்பதற்கு தலா ரூபா 5 மில்லியன் ஒதுக்கப்படும்.

4.43pm - சிறிய குளங்களின் புனரமைப்பிற்காக ரூபா 300 மில்லியன் ஒதுக்கப்படும்.

4.42pm - 'பிரிவெனா' மத கல்வி மாணவர்களுக்கு மாதாந்தம் ரூபா 2,500 வழங்குவதற்கு பரிந்துரை.

4.41pm - அனர்த்த முகாமைத்துவ பயிற்சி மத்திய நிலையம் ஒன்று பெல்மதுளையில் நிறுவப்படும்.

4.39pm - 2017 மே மாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகளின் உத்தியோகபூர்வ 'வெசக்' பண்டிகைக்காக, ரூபா 250 மில்லியன் ஒதுக்கப்படும்.

4.37pm - நாடு முழுவதிலும் வர்த்தக நீதிமன்றம் 4 இனை உருவாக்குதவற்கு பரிந்துரை.

4.35pm - 'சேவா பியஸ' தொடர்பில் ரூபா 1,500 மில்லியன் ஒதுக்கப்படும்.

4.33pm - 'சமுர்த்தி' திட்டத்தின் பெயரை 'ஜன இசுரு' என மாற்றுவற்கு பரிந்துரை.

4.32pm - விளையாட்டு தொடர்பில் புதியவர்களை அறிமுகப்படுத்தி, அவர்களை ஊக்குவிக்க ரூபா 50 மில்லியன் ஒதுக்கப்படும்.

4.30pm - லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் 'ரேகாவ', 'நிதானய' போன்ற திரைப்பட பாதுகாப்பு தொடர்பிலான அலகொன்றை, தேசிய திரைப்பட கூட்டுத்தாபனத்தில் ஆரம்பிப்பதற்கு, ரூபா 50 மில்லியன் ஒதுக்கப்படும்.

4.29pm - அமரதேவ இசை ஆசிரமம் ஒன்றை நிறுவுவதற்கு ரூபா 25 மில்லியன் ஒதுக்கப்படும்.

4.26pm - சுயதொழிலில் ஈடுபட்டுள்ள இளைஞர், யுவதிகள் 50 பேர் கொண்ட வர்த்தகம் தொடர்பில் கடன் வழங்குவதற்கு, தலா ஒவ்வொரு கிராம அதிகாரி பிரிவிற்கும் ரூபா ஒரு மில்லியன் வீதம் ஒதுக்கப்படும்

4.25pm - தேசிய இளைஞர் சேவை சபை மற்றும் இளைஞர் படையணிக்கு ரூபா 400 மில்லியன் ஒதுக்கப்படும்.

4.24pm - புதிய நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்கும், பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு ரூபா 1.5 மில்லியன் கடன் தொகை, எதிர்காலத்தில் வழங்கப்படும். இதற்காக 100% வட்டி சலுகை வழங்கப்படும்.

4.23pm - சனத் தொகை தொடர்பான பயனை அடையும் பொருட்டு, உயர் கல்வி முதலீட்டு பிரிவு தொடர்பில் இளைஞர் யுவதிகள் மற்றும் பெண்களுக்கு உரிய அறிவு மற்றும் அனுபவத்தை வழங்கி, சுதந்திர தொழில்நுட்ப கல்வியை வழங்கும் கொள்கையை அறிமுகப்படுத்தல்.

4.21pm - புகையிரத சேவை தொடர்பில் முற்கொடுப்பனவு அட்டையை அறிமுகப்படுத்த பரிந்துரை.

4.20pm - சனத்தொகை மாற்றத்திற்கு ஏற்ப தற்போதுள்ள ஓய்வூதிய முறை, வெடிக்கவுள்ள நேர குண்டாகும். எனவே உதவி ஓய்வூதிய முறையை ஆரம்பிக்க ரூபா 1,000 மில்லியன் ஒதுக்கப்படும்.

4.13pm - பெருந்தோட்ட துறை லைன் அறைகளில் வாழ்வோருக்கு 25,000 வீடுகள் நிர்மாணிக்கப்படும். காணி மற்றும் ஏனைய வசதிகள் அரசாங்கத்தினால் இலவசமாக வழங்கப்படும்.

4.11pm - சிறிய மற்றும் மத்திய வருமானங்களைக் கொண்ட குடும்பங்களுக்கு 5 இலட்சம் வீடுகள் நிர்மாணிக்கப்படும்.

4.07pm - கோல்டன் கீ (Golden Key) வைப்பாளர்களுக்கு மீதமுள்ள ரூபா 3,000 மில்லியனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

4.05pm - மார்ச் 31 ஆம் திகதி முதல், புதிய உள்நாட்டு விமான சேவை ஆரம்பிக்கப்படும்.

4.03pm - பஸ் சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் சுத்தம் செய்வோருக்கு ஓய்வூதிய கொடுப்பனவு முறை அறிமுகப்படுத்தப்படும்.

4.01pm - பாடசாலை வேன் உரிமையாளர்களுக்கு, அவ்வாகனத்திற்கு பதிலாக 32 ஆசனங்களைக் கொண்ட பஸ்களை கொள்வனவு செய்வது தொடர்பில் ஊக்குவித்தல். அதற்காக வட்டி சலுகைகளை வழங்குதல்.

4.00pm - முச்சக்கர வண்டிகளுக்கு பதிலாக நான்கு சக்கர இலத்திரனியல் மோட்டார் வாகனம் (Car) அறிமுகப்படுத்தப்படும்.

3.55pm - நஷ்டத்தை சந்தித்துள்ள, மிஹின் லங்கா மற்றும் ஶ்ரீ லங்கன் விமான சேவைகளை மீண்டும் இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றுவதற்கு அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

3.49pm - இலங்கையில் தங்களது பிரதான கிளையை அமைக்க விரும்பும் முன்னணி நிறுவனங்களுக்கு, பெரு நிறுவன வரி விலக்களிக்கப்படும்.

3.48pm - கட்டுமான கைத்தொழில் தொடர்பில் அறவிடப்பட்ட 25% செஸ் (CESS) வரி நீக்கப்படும்.

3.45pm - இலங்கையில் முதலீடு செய்வதற்காக வரும் வெளிநாட்டவர்களுக்காக 5 வருட வீசா வழங்க நடவடிக்கை.

3.38pm - மத்திய வங்கியினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 'சௌபாக்யா', 'ஸ்மைல்' கடன் திட்ட முறைகளை வேறு கடன் திட்டங்களுடன் ஒன்றிணைப்பதற்கு பரிந்துரை செய்கிறேன்.

3.35pm - கொழும்பு நகரில் விசேட கைவினை மத்தியநிலையம் ஒன்றை உருவாக்குவதற்கு ரூபா 100 மில்லியன் ஒதுக்கப்படும்.

3.32pm - தேசிய கலைஞர்களை ஊக்குவிக்க 'லக்சல' நிறுவனத்தால் அவர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை பணத்தை ஒரு மாத காலத்தினுள் வழங்கி முடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

3.31pm - தொழில் வாய்ப்பை உருவாக்கும் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழிலாளர்கள் தொடர்பில் ரூபா 250 - 750 மில்லியன் வரையான கடன் வழங்குவதற்கு பரிந்துரை.

3.29pm - வங்கிக் கடன்களில் 10% இனை சிறிய மற்றும் நடுத்தர சுய தொழிலாளர்களுக்கு ஒதுக்குவதற்கு பரிந்துரை.

3.28pm - சிறிய மற்றும் நடுத்தர சுய தொழிலாளர்களுக்கு நிதி வசதிகளை ஏற்படுத்த கடன் திட்டத்தை ('நய சுரகும்') திட்டத்தை ஆரம்பித்து அதன் நிதி மூலதனத்திற்கு ரூபா 500 மில்லியன் ஒதுக்கப்படும்.

3.25pm - பயன்படுத்தப்படாத காணிகளை நீண்ட கால வாடகை திட்டத்தில் வழங்குவதற்கு தீர்மானம்.

3.21pm - அனைத்து மருந்தகங்களும் தேசிய ஒளடத அதிகாரசபையில் பதிவு செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.

3.20pm - அனைத்து நோயாளிகளும், சிகிச்சை வழங்கப்பட்டு அவர்கள் வைத்தியசாலையிலிருந்து வெளியேறும்போது அவர்களுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைக்கான செலவுகள் அடங்கிய அறிக்கை வழங்குவதற்கு நடவடிக்கை.

3.18pm - அம்பாறை, யாழ்ப்பாணம், கராபிட்டி ஆகிய வைத்தியசாலைகளில், விசேட குழந்தை பிரிவை உருவாக்குவதற்கு ரூபா 1,000 மில்லியன் ஒதுக்கப்படும்.

3.14pm - செவிலியர்களுக்கான (Nurse) பயிற்சி பாடசாலைகளுக்கு ரூபா 200 மில்லியன் ஒதுக்கப்படும்.

3.13pm - கல்வியின் உயர் தரம் தொடர்பில், தரநிர்ணய சபையை உருவாக்குதல்.

3.12pm - இளைஞர் யுவதிகளுக்கு உயர் கல்வியை வழங்கும் நோக்கில், தனியார் பிரிவின் உதவியை பெறுவதன் மூலம், அரச சார்பாற்ற பட்டப்படிப்பு நிறுவனங்களை நாட்டில் ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குதல்.

3.11pm - இலங்கையில் கல்வியைத் தொடர விருப்பமான வெளிநாட்டு மாணவர்களுக்கு 5 வருட வீசா வழங்குவதற்கான பரிந்துரை.

3.10pm - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அனுமதிக்கப்பட்ட தனியார் பல்கலைக்கழகங்களில், இஸட் புள்ளியை (Z Score) அடிப்படையாகக் கொண்டு அனுமதி பெறும் மாணவர்கள் 5,000 பேருக்கு, தலா ரூபா 8 இலட்சம் வரை கடன் உதவி வழங்குவதற்கு பரிந்துரை.

3.08pm - பல்கலைக்கழகங்களில் விரிவுரை நிகழ்த்தப்படும் கால எல்லையை இரவு 8.00 மணி வரை நீடிப்பதற்கு பரிந்துரை.

3.07pm - 17 பல்கலைக்கழகங்களில் பொறியியல், வைத்திய, சட்ட பீடத்தில் கற்கும் மாணவர்களில், தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் மூவருக்கு, உலகளாவிய ரீதியில் உயர் நிலையிலுள்ள பல்கலைகழகத்திற்கு செல்லும் புலமைப்பரிசில் திட்டம் உருவாக்கப்படும்.

3.06pm - உயர் கல்வி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை, 2020 ஆம் ஆண்டளவில் 50,000 ஆக அதிகரிக்கப்படும்.

3.05pm - சகல மாணவர்களுக்கும் (05 - 19 வயது) தலா ரூபா 2 இலட்சம் கொண்ட 4.5 மில்லியன் பாடசாலை மாணவர்களுக்கு காப்புறுதி திட்டம்.

3.04pm - விசேட கல்வித் தேவையைக் கொண்ட மாணவர்களுக்கு நாளாந்தம் வழங்கப்படும் கொடுப்பனவு ரூபா 50 இலிருந்து ரூபா 150 ஆக அதிகரிக்கப்படும்.

3.03pm - ஆரம்ப மற்றும் இடைநிலை பாடசாலைகளிலுள்ள ஆய்வுகூடம், நூலகம் உள்ளிட்ட வசதிகளை விருத்தி செய்ய ரூபா 21,000 மில்லியன் ஒதுக்கப்படும்.

3.02pm - 2017 ஆம் ஆண்டு நிறைவில், நாடு முழுவதிலுமுள்ள 100 பாடசாலைகளுக்கு நீர், மின்சாரம் மற்றும் சுகாதார வசதிகள் தொடர்பான அபிவிருத்திக்கு ரூபா 5,000 மில்லியன் ஒதுக்கப்படும்.

3.01pm - 35,000 பாடசாலைகளுக்கு தகவல் தொழில்நுட்ப வசதிகள் வழங்கப்படும். இதற்கு ரூபா 5,000 மில்லியன் ஒதுக்கப்படும்.

3.00pm - 2017 ஆம் ஆண்டில் க.பொ.த. உயர்தரத்திற்கு உள்வாங்கப்படும் 175,000 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு டெப்லட் கணனிகள் (Tab) வழங்கப்படும்.

2.58pm - மன்னார் தாராபுரம் குளத்தை புனருத்தாபனம் செய்ய ரூபா 600 மில்லியன்.

2.57pm - அழகு பூக்கள், மீன்கள் வளர்ப்பு கைத்தொழிலை ஊக்குவிக்க நாற்றுமேடைகளை ஏற்படுத்த அரசாங்கத்தினால் 50% வட்டிக் கடன் வழங்கப்படும். இதற்கென ரூபா 50 மில்லியன் ஒதுக்கப்படும். உச்சபட்சம் ரூபா 5 இலட்சம் வழங்கப்படும்.

2.51pm - கோழி இறைச்சி மீது விதிக்கப்பட்டுள்ள 1 கிலோ கிராமுக்கான முழு கோழியின் அதிகூடிய சில்லறை விலையை ரூபா 420.

2.50pm - குளம் காணப்படும் கிராம திட்டத்தின் கீழ் ஒன்றிணைக்கப்பட்ட 100 நன்னீர் கிராமங்கள் தொடர்பில் ரூபா 300 மில்லியன் ஒதுக்கப்படும்.

2.49pm - ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட 10 கரையோர மாவட்டங்களின் வாழ்க்கைத் தரத்தை அபிவிருத்தி செய்ய ரூபா 1,200 மில்லியன் ஒதுக்கப்படும்.

2.48pm - மீன்பிடி துறைமுகங்களின் அடிப்படை வசதிகள் மற்றும் நங்கூர வசதிகளை அதிகரிக்க ரூபா 1,350 மில்லியன் ஒதுக்கப்படும்.

2.43pm - மீன் பதப்படுத்தல் மற்றும் தகரத்தில் அடைத்தல் போன்ற ஏற்றுமதிச் செயற்பாடுகள் தொடர்பில் ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட பிரதேசங்களில் நன்னீர் மீன் வலயங்களை ஏற்படுத்த ரூபா 700 மில்லியன்.

2.40pm - தேசிய பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலையை அதே விலையில் பேணவுள்ளோம்.

2.39pm - பால் விவசாயிகளுக்கான பாற் பண்ணை வலயம் அமைக்க திட்டமிட்டுள்ளோம்.

2.39pm - இறப்பர் கைத்தொழிலை அபிவிருத்தி செய்ய ரூபா 900 மில்லியன்.

2.35pm - தேயிலை கைத்தொழில் தொடர்பான பல்வேறு பிரிவுகளில் வரித் திருத்தம் செய்யப்படும்.

2.34pm - "ஓய்வு பெற்றவர்களுக்கான அரச ஓய்வூதியங்களுக்கு அரசாங்கம் செலுத்தும் ஓய்வூதியச் செலவு அதிகமாக உள்ளது எனவே, எதிர்காலத்தில் திருத்தியமைக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

2.26pm - வடக்கு கிழக்கில் காணப்படும் பொருளாதார பிரச்சினைகளுக்கு எமது அரசாங்கம் 2020 இல் தீர்வு காணும்.

2.24pm - விவசாய அபிவிருத்தி தொடர்பான தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவோம்.

2.22pm - சிறிய மற்றும் மத்திய பரிமாண வியாபாரங்களுக்கு சர்வதேச சந்தைக்கான வாய்ப்பை ஏற்படுத்துவோம்.

2.17pm - ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்திற்கு வருகை.

2.10pm - வறுமையை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவையை கொண்டுள்ளோம்.

2.00pm - ரவி கருணாநாயக்க பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட உரை.

இந்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் கருப்பொருள், 'நன்மை பயக்கும் விரைவான வளர்ச்சியை நோக்கி பயணித்தல்' என்பதாகும்.

 


12.30pm -  2017 வரவு செலவுத் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது - ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக.


10.30 am - நல்லாட்சி (தேசிய) அரசாங்கத்தின் 2017 ஆம் நிதி ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அது தொடர்பான நேரடி ஒளிபரப்பை எதிர்பாருங்கள்...


Add new comment

Or log in with...