டிரானின் உயர் நீதிமன்ற விளக்கமறியல் நீக்கம்

 

றிஸ்வான் சேகு முகைதீன்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ராடா நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான டிரான் அளஸிற்கு விதிக்கப்பட்ட விளக்கமறியலை மேன்முறையீட்டு நீதிமன்றம் நீக்கியுள்ளது.

வடக்கு, கிழக்கு புனரமைப்பு மற்றும அபிவிருத்தி தொடர்பிலான ராடா நிறுவனத்தில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் அதன் முன்னாள் தலைவரான டிரான் அளஸ் உள்ளிட்ட நால்வருக்கு நவம்வர் 10 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டிருந்தது. 

கொழும்பு உயர் நீதிமன்றினால் விதிக்கப்பட்ட இவ்வுத்தரவுக்கு எதிராக டிரான் அளஸ் மேற்கொண்ட மேன்முறையீட்டை அடுத்தே அவர் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட ரூபா 20 கோடி பணத்தை மோசடி செய்ததாக தெரிவித்தே ராடா நிறுவனத்தின் முக்கிய பதவியிலுள்ள நால்வருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் 10 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...