டீசல் உற்பத்தி வரி ரூ. 13 ஆக அதிகரிப்பு; விலை மாறாது

 

றிஸ்வான் சேகு முகைதீன்

டீசல் உற்பத்தி வரி ரூபா 10 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

உலக சந்தையில் கச்சா எண்ணெயாக இறக்குமதி செய்யப்படும் எரிபொருளிலிருந்து அரசாங்கத்தினால் டீசல், பெற்றோல் உள்ளிட்ட பல்வேறு எரிபொருள் வகைகள் பிரித்தெடுக்கப்படுகின்றன. இதற்கமைய ஏற்கனவே ஒரு லீட்டர் டீசல் தயாரிப்புக்கு உற்பத்தி வரியாக ரூபா 3 அறவிடப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் தற்போது டீசல் உற்பத்தி வரி ரூபா 13 ஆக அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வரி அதிகரிப்பு, ஓகஸ்ட் 20 ஆம் திகதி முதல் அமுலுக்கு வருவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளதோடு, குறித்த வரி அதிகரிப்பின் காரணமாக சந்தையில், டீசல் விலையில் மாற்றம் ஏற்படாது எனவும் தெரிவித்துள்ளது.

உலக சந்தையில் கச்சா எண்ணையின் விலை குறைவடைந்துள்ளதால், அதன் மூலம் அரசாங்கத்திற்கு இலாபத்தை பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே இவ்வாறு வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

 


Add new comment

Or log in with...