ஆசிரியை தாக்குதல்; மாணவன் வைத்தியசாலையில்

 

RSM

ஆசிரியை ஒருவரின் தாக்குதலுக்கு இலக்காகிய மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட காசல்ரீ பிரதேசத்தில் அமைந்துள்ள தரம் 5 வரையிலான ஆரம்ப பிரிவு பாடசாலையில் தரம் 4 இல் கல்வி பயிலும் நேசராஜா சசீகரன் என்ற மாணவனே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவராவார்

கடந்த வெள்ளிக்கிழமை புத்கத்திற்கு உறை போடவில்லையென குறித்த மாணவனின் கைகளில்  பிரம்பினால் தாக்கியதால் பாதிப்புக்குள்ளான மாணவனை அன்றைய தினம் பொற்றோர்களினால் பிரதேச தோட்ட வைத்தியசாலையில் மருத்துவ சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்

இந்நிலையில் இது தொடர்பில் இன்று (05) குறித்த மாணவனின் பொற்றோரால் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை அடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

சம்பவம் தொடர்பில் குறித்த ஆசிரியையிடம் கேட்ட போது குறித்த மாணவனை நீன்ட நாட்களாக தனது புத்தகங்களுக்கு உறை போடுமாறு அறிவித்தபோதும் அதை செய்யவில்லை எனவும் பொற்றோர்களுக்கு அழைப்பு விடுத்தும் பாடசாலைக்கு சமூகம் தரவில்லை எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில் குறித்த மாணவனை நல்வழிப்படுத்தும் நோக்கில்  சிறிய பிளாஸ்ரிக் கைபிரம்பினால் தாக்கியதாகவும் குறித்த மாணவன் மீது தனிப்பட்ட கோபங்கள் எதுவுமில்லை என்றும் வைத்தித்தசாலையில் சிகிச்சை பெற்று வரும் குறித்த மாணவரை பார்வையிட்டு நலன் விசாரித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

(நோட்டன் பிரிட்ஜ் நிருபர் - இராமச்சந்திரன்)

 


Add new comment

Or log in with...