ஐரோப்பிய ஒன்றியத்துக்கான மீன் ஏற்றுமதி தடை நீக்கம்

Rizwan Segu Mohideen

றிஸ்வான் சேகு முகைதீன்

 

ஐரோப்பிய ஒன்றியத்தினால் (European Union - EU) இலங்கையின் மீன் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை, அவ்வொன்றியம் முழுமையாக நீக்கியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி ரங்க கலன்சூரிய இது குறித்து தெரிவிக்கையில், நேற்று (16) இரவு முதல் அமுலாகும் வகையில் குறித்த தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியுள்ளதாக தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் இத்தடை நீக்கம் தொடர்பில் அறிவிக்கப்பட்டிருந்ததோடு, அது குறித்தான உத்தியோகபூர்வ முடிவை ஐரோப்பிய ஒன்றியம் தற்போது அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த அரசாங்க காலத்தில், 2014 ஒக்டோபர் மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தால் குறித்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
 
சர்வதேச கடல் எல்லை தொடர்பான நிர்வாகம், கட்டுப்பாடு, மேற்பார்வை போன்றவை தொடர்பில், இலங்கை ஒழுங்கற்று செயற்படுவதாக தெரிவித்தே குறித் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக கடந்த வருடத்தின் (2015) முதல் 6 மாதம் வரை, சுமார் ரூபா 975 கோடி அந்நியச் செலாவணியை இலங்கை இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...