சரத் பொன்சேகாவிற்கு எதிரான வழக்கு தள்ளுபடி

 
Rizwan Segu Mohideen
றிஸ்வான் சேகு முகைதீன்
 
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற நியமனத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
 
உச்ச நீதிமன்றத்தில் இன்று (24) எடுத்துக்கொள்ளப்பட்ட குறித்த வழக்கு விசாரித்த, மூவர் அடங்கிய நீதிபதிகளால் குறித்த மனு தள்ளுபடி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
கடந்த பெப்ரவரி 09 ஆம் திகதி, ஜனநாயக் கட்சியின் தலைவரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் மூலமான பாராளுமன்ற வெற்றிடத்திற்காக நியமனம் பெற்றார். காலஞ் சென்ற காணி அமைச்சர் M.K.D.S குணவர்தனவினால் உருவான  வெற்றிடத்திற்கே அவர் நியமிக்கப்பட்டிருந்தார்.
 
இதேவேளை குறித்த நியமனம் தொடர்பில் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தினால் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கை கடந்த பெப்ரவரி 18 ஆம் திகதி பதிவு செய்திருந்தது.
 
தேர்தல்கள் ஆணையாளரிடம் சமர்ப்பித்த தேசியப் பட்டியலில் சரத் பொன்சேகாவின் பெயர் உள்ளடக்கப்படாத நிலையில், தற்போது வழங்கப்பட்டுள்ள நியமனத்தின் மூலம் மக்கள் ஆணை புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அந்நியமனத்தை இடைநிறுத்துமாறு அம்மனுவில் கோரப்பட்டிருந்ததோடு,
 
மேலும், இதன் மூலம் அரசியலமைப்பின் 19 ஆவது சரத்து மீறப்படுவதாகவும் குறித்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

Add new comment

Or log in with...