நியூசிலாந்தில் இளம் பெண் பிரதமராக தேர்வு | தினகரன்

நியூசிலாந்தில் இளம் பெண் பிரதமராக தேர்வு

நியூசிலாந்தில் ஜெசின்டா அர்டெர்ன் தலைமையிலான தொழில் கட்சியின் மைய இடதுசாரி கூட்டணி ஒன்று ஆட்சி அமைக்கவுள்ளது.

கடந்த மூன்று மாதங்களாக எதிர்க்கட்சி தலைவியாக இருக்கும் 37 வயது அர்டெர்ன், 1856 ஆம் ஆண்டுக்கு பின்னர் நியூசிலாந்தின் இளம் பிரதமராக பதவி ஏற்கவுள்ளார்.

கடந்த செப்டெம்பரில் நடந்த தேர்தலில் எந்த ஒரு கட்சியும் பெரும்பான்மை பெறாத நிலையில் அவரது தொழில் கட்சி இரண்டாவது இடத்தை பிடித்தது. எனினும் சிறு கட்சியான நியூசிலாந்து முதல் கட்சி தொழில் கட்சியுடன் கூட்டணி சேர இணங்கியுள்ளது.

இதன்படி நியூசிலாந்தில் புதிய அரசு அமைவதில் கடந்த ஒரு மாதமாக நீடித்த இழுபறிக்கு முடிவு கிடைத்துள்ளது.

தேர்தலில் 8 வீதத்துக்கு மேல் அதிக வாக்குகளைப் பெற்றிருந்தபோதும் தற்போதைய பிரதமர் பில் இங்கிலிஷின் கன்சர்வேட்டிவ் கட்சி கூட்டணி அரசாங்கம் அமைக்கும் வாய்ப்பை இழந்தது. 


There is 1 Comment

It's great to see a woman's achievement.

Pages

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...