வீட்டு வேலை பார்த்த மனைவிக்கு இழப்பீடு

- சீன நீதிமன்றம் உத்தரவு

மனைவி திருமணக் காலத்தில் செய்த வீட்டு வேலைகளுக்கு இழப்பீடு வழங்கும்படி சீனாவின் விவாகரத்து நீதிமன்றம் ஒன்று தீர்ப்பு அளித்துள்ளது.

ஊதியம் வழங்கப்படாமல் செய்த வேலைகளுக்காக அந்தப் பெண்ணுக்கு 50,000யுவான்கள் வழங்கப்படவுள்ளது.

இந்த வழக்கு வீட்டு வேலைகளுக்கான பெறுமதி பற்றிய பெரும் விவாதத்தை சமூக ஊடகத்தில் உருவாக்கியுள்ளது. சிலர் இந்த இழப்பீட்டுத் தொகை மிகக் குறைவாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் புதிய சிவில் சட்டத்திற்கு அமையவே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  

நீதிமன்ற பதிவுகளின்படி சேன் என்ற பெயர் கொண்ட ஆடவர் ஒருவரே கடந்த ஆண்டு தனது மனைவியிடம் விவாகரத்துக் கேட்டுள்ளார். அவர்கள் 2015ஆம் ஆண்டு திருமணம் புரிந்துள்ளனர்.   ஆரம்பத்தில் விவாகரத்து வழங்க மறுத்த மனைவி பின்னர் சேன் வீட்டு வேலைகள் எதனையும் செய்வதில்லை என்றும் தமது மகனில் பெறுப்புகள் எதனையும் செய்வதில்லை என்றும் கூறி அதற்காக நிதி இழப்பீடு கேட்டுள்ளார்.  

பீஜிங்கின் பெங்சேன் மாவட்ட நீதிமன்றமே இதற்கு ஆதரவாக தீர்ப்பு அளித்துள்ளது. இழப்பீட்டுத் தொகையுடன் மாதாந்த ஜீவனாம்சமாக 2,000 யுவான்களை வழங்க கணவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.   


Add new comment

Or log in with...