சீன பெண்ணை இழிவுபடுத்தும் விளம்பரத்திற்காக மன்னிப்பு

சீனாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று முக ஒப்பனையை அகற்றும் காகிதத் தாள்கள் விளம்பரத்திற்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளதோடு அந்த விளம்பரத்தையும் நீக்கியுள்ளது.

புர்கொட்டோன் எனும் நிறுவனத்தின் அந்த விளம்பரத்தில், தம் முக ஒப்பனையை நீக்கி, தன்னைப் பின்தொடர்ந்த ஆடவரைப் பயமுறுத்துகிறார் ஒரு பெண். முக ஒப்பனையை நீக்கிய பின் அந்தப் பெண் ஓர் ஆண் போல் தோற்றமளிக்கிறார்.

அத்துடன் 'வாந்தி' என்ற சொல் சீனத்தில் தோன்றுகிறது. அது பாலியல் தொந்தரவுக்குப் பெண்கள் தான் காரணம் என்பது போல் சித்தரிப்பதாகப் பல இணையவாசிகள் குறைகூறியதை பி.பி.சி செய்தி நிறுவனம் குறிப்பிட்டது. மேலும் சிலர், பெண்கள் முக ஒப்பனையின்றி அழகில்லை என்ற கருத்தை அந்த விளம்பரம் முன் வைப்பதாக விமர்சித்தனர்.

அதை அடுத்து, அந்த நிறுவனத்தின் பொருட்களைப் புறக்கணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாக பி.பி.சி தெரிவித்தது.


Add new comment

Or log in with...