சிங்கப்பூரிலிருந்து சட்டவிரோதமாக கார்கள் கொள்கலன்களில் இறக்குமதி

சட்டவிரோதமாக சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள ஐந்தரைக் கோடி ரூபா பெறுமதியான 12 கார்களை சுங்கத் திணைக்கள  அதிகாரிகள்கண்டுபிடித்துள்ளதுடன் அது தொடர்பில் சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

பிரிட்டன் உயர் ஸ்தானிகராலய அதிகாரியொருவரின் பெயரைப் பயன்படுத்தி போலியாக இந்த இறக்குமதி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 23ஆம் திகதி சிங்கப்பூரிலிருந்து மின்சார உறுதிப்பாகங்கள் என்ற பெயரில் மூன்று கொள்கலன்களில் இந்தப் 12 மோட்டார் கார்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதுடன் அவை 12 ஆயிரத்து 140 கிலோ கிராம் எடை கொண்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அது தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்கத்திணைக்களப் பணிப்பாளர் நாயகம் எஸ். ஆனந்த ஈஸ்வரன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகளை அடுத்து நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சுங்கத் திணைக்கள ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...